Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ : டீமை மாத்தினா தான் சரியா வரும்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு.. 2 வீரர்கள் நீக்கம்!

Recommended Video

IND vs NZ | Captain Kohli dropped 2 players| இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 வீரர்கள் நீக்கம்!

ஆக்லாந்து : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரண்டு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

முகமது ஷமி, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் இரண்டு வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

கேப்டன் கோலியின் இந்த முடிவு எதிர்பார்த்தது தான் என்றாலும், ஷமியை நீக்கியதை பலரும் எதிர்பார்க்கவில்லை.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி பெரிய ஸ்கோர் எடுத்தும், அதை தடுக்க முடியாமல், தோல்வி அடைந்தது.

சவாலான இலக்கு

சவாலான இலக்கு

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 347 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணிக்கு இது சவாலான இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூசிலாந்து அணி அந்த இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது.

பந்துவீச்சு மோசம்

பந்துவீச்சு மோசம்

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது தான். குறிப்பாக, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், இருவரும் ரன்களை வாரி இறைத்து இருந்தனர். பும்ரா மட்டுமே அந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.

மாற்றம்

மாற்றம்

அதனால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர் இருவரும் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷர்துல் தாக்குர் அணியில் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் இடம் பெற்றார்.

முகமது ஷமி, குல்தீப் நீக்கம்

முகமது ஷமி, குல்தீப் நீக்கம்

முகமது ஷமி, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நவ்தீப் சைனி மற்றும் சாஹல் அணியில் இடம் பெற்றனர். சைனி, சாஹலை அணியில் சேர்க்க வேண்டும் என விமர்சகர்களும், ரசிகர்களும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே முடிவை கோலியும் எடுத்துள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அதே சமயம், முதல் ஒருநாள் போட்டியில் 9 ஓவர்கள் பந்து வீசி 80 ரன்கள் கொடுத்த ஷர்துல் தாக்குர் அணியில் தொடர்ந்து இடம் பெற்றது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. எனினும், கேப்டன் கோலி அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை தேர்வு செய்துள்ளார்.

ஷர்துல் தாக்குர் மீது விமர்சனம்

ஷர்துல் தாக்குர் மீது விமர்சனம்

ஷர்துல் தாக்குர் பேட்டிங்கிலும் சில போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி இருப்பது தான் அவரை கோலி தொடர்ந்து தேர்வு செய்ய காரணம் என்றும் கூறப்படுகிறது. சிலர் அவர் பேட்டிங்கில் எடுக்கும் ரன்களை விட, பந்துவீச்சில் கொடுக்கும் ரன்கள் அதிகம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

சிறிய மைதானம்

சிறிய மைதானம்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணியை அறிவித்த கேப்டன் கோலி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டி நடைபெறும் ஆக்லாந்து மைதானம் சிறிய பவுண்டரிகளை கொண்டது என்பதால் சேஸிங் செய்வது எளிது என்ற எண்ணம் உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணியை அறிவித்த கேப்டன் கோலி, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டி நடைபெறும் ஆக்லாந்து மைதானம் சிறிய பவுண்டரிகளை கொண்டது என்பதால் சேஸிங் செய்வது எளிது என்ற எண்ணம் உள்ளது.

நியூசிலாந்து மாற்றம்

நியூசிலாந்து மாற்றம்

அதன்படி, கேப்டன் கோலி டாஸ் வென்று இந்திய அணிக்கு சாதகமான முடிவை எடுத்தார். நியூசிலாந்து அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அந்த அணியில் மார்க் சாப்மேன் சேர்க்கப்பட்டு, மிட்செல் சான்ட்னர் நீக்கப்பட்டார். இஷ் சோதி நீக்கப்பட்டு, கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி வீரர்கள் - ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா

Story first published: Saturday, February 8, 2020, 8:19 [IST]
Other articles published on Feb 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+