Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவால் தப்பிய மானம்.. இந்தியா மோசமான தோல்வி.. தொடரை வென்றது நியூசிலாந்து! #INDvsNZ

Recommended Video

INDvsNZ 2nd ODI | ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா

ஆக்லாந்து : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் இந்திய அணி ஒருநாள் தொடரை 2 - 0 என இழந்துள்ளது. டி20 தொடரில் வைட்வாஷ் செய்யப்பட்ட நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரில் திருப்பி அடித்துள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜடேஜா மற்றும் பின்வரிசை வீரர்களால் தான் இந்திய அணியின் மானம் தப்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆக்லாந்து ஆடுகளத்தில் சேஸிங் செய்வது எளிது என்பதால் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் ஆடியது.

நியூசிலாந்து பேட்டிங் அபாரம்

நியூசிலாந்து பேட்டிங் அபாரம்

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்கம் அபாரமாக அமைந்தது. மார்ட்டின் கப்தில் 79 ரன்கள் குவித்தார். ஹென்றி நிக்கோல்ஸ் 41 ரன்கள் குவித்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 93 ரன்கள் சேர்த்தது. அடுத்து ராஸ் டெய்லர் சிறப்பாக ஆடினார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

எனினும், இடையே டாம் பிளண்டல் 22, லாதம் 7, நீஷம் 3, கிராண்ட்ஹோம் 5, சாப்மேன் 1, சவுதி 3 ரன்கள் என வரிசையாக ஆட்டமிழந்தனர். ராஸ் டெய்லர் மட்டும் ஒருபுறம் நிலைத்து, நிதான ஆட்டம் ஆடி வந்தார்.

ஜேமிசன், டெய்லர் ஜோடி

ஜேமிசன், டெய்லர் ஜோடி

கடைசி நேரத்தில் 8 விக்கெட் வீழ்ந்த நிலையில், அறிமுக வீரர் ஜேமிசன் உடன் இணைந்த ராஸ் டெய்லர் அதிரடியாக ரன் குவித்தார். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு பின்னடைவை அளித்தது. நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் குவித்தது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

அடுத்து 274 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷா - மயங்க் அகர்வால் ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. மயங்க் அகர்வால் 3, ப்ரித்வி ஷா 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கோலி 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்

ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்

ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவரும் 57 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இடையே ராகுல் 4, கேதார் ஜாதவ் 9 ரன்களில் ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சி அளித்தனர்.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

இந்திய அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என அனைத்து பேட்ஸ்மேன்களும் அணியை கை விட இந்திய அணி 129 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது ஜடேஜா - ஷர்துல் தாக்குர் ஜோடி ஓரளவு நம்பிக்கை அளித்தது.

ஜடேஜா நிதானம்

ஜடேஜா நிதானம்

ஷர்துல் தாக்குர் 18 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். ஜடேஜா தொடர்ந்து நிதான ஆட்டம் ஆடி வந்தார். அடுத்து வந்த நவ்தீப் சைனிக்கு ஆலோசனை கூறி அவரை ரன் குவிக்க வைத்தார் ஜடேஜா. சைனி அபார ஆட்டம் ஆடி 45 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

சாஹல் 10 ரன்கள் எடுத்தும், ஜடேஜா 55 ரன்கள் எடுத்தும் அவுட் ஆக இந்திய அணி 48.3 ஓவரில் தோல்வி அடைந்தது. மிக மோசமான தோல்வி அடைய வேண்டிய இந்திய அணி ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றிக்கு அருகே வந்து தோல்வி அடைந்தது.

பந்துவீச்சு மோசம்

பந்துவீச்சு மோசம்

நியூசிலாந்து அணியில் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக ஆடாத நிலையில், அந்த அணியிடம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் பேட்டிங் மோசமாக இருந்தது என்றாலும், இந்திய அணியின் பந்து வீச்சு இரண்டு போட்டிகளிலும் மோசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், தற்போது இந்திய அணி ஒருநாள் தொடரை 2 - 0 என இழந்துள்ளது.

Story first published: Saturday, February 8, 2020, 16:57 [IST]
Other articles published on Feb 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+