For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ : ஆல்-ரவுண்டரே வேண்டாம்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு.. உள்ளே வந்த இளம் வீரர்!

Recommended Video

IND VS NZ 4TH T20 | Manish pandey's 50 helps India post 165-8

மவுன்ட் மவுங்கனி : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ள இந்திய அணி, இந்தப் போட்டியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்து உள்ளது.

வெற்றி கிடைக்குமா?

வெற்றி கிடைக்குமா?

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என ஆதிக்கம் செலுத்தி வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் திணறி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடரில், இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது இந்திய அணி. மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளம் எப்படி?

மூன்றாவது போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் இதுவரை ஆடிய அணிகள் சராசரியாக 280 ரன்கள் குவிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

கோலி முடிவு

கோலி முடிவு

கேப்டன் கோலி இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் என தெரிகிறது. கேதார் ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் இரண்டு போட்டிகளில் பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளே வந்த மனிஷ் பாண்டே

உள்ளே வந்த மனிஷ் பாண்டே

கேதார் ஜாதவ்வுக்கு பதில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய மனிஷ் பாண்டே அணியில் தேர்வு செய்யப்பட்டார். அவர் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், ஒருநாள் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் அவர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அவர் ஒருநாள் அணியில் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் விவரம் - ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்திய அணி இந்தப் போட்டியிலும் சுமாரான துவக்கம் பெற்றது. மயங்க் அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த கோலி 9 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 56 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது.

Story first published: Tuesday, February 11, 2020, 8:48 [IST]
Other articles published on Feb 11, 2020
English summary
IND vs NZ : India vs New Zealand 3rd ODI match update and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+