Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறப்பா செஞ்சுட்டீங்க.. இதை பார்க்கவா விடியற்காலை 4 மணிக்கு முழிச்சோம்.. செம கடுப்பான ரசிகர்கள்!

Recommended Video

IND VS NZ IST TEST DAY 1 | India are 122 for 5 - (Stumps)

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா சுமாராக பேட்டிங் செய்து அதிர்ச்சி அளித்தது.

இந்த போட்டியைக் காண விடியற்காலை நான்கு மணிக்கு விழித்து அமர்ந்த ரசிகர்கள், அணியின் முன்னணி அனுபவ வீரர்கள் புஜாரா, கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை கண்டு வெறுத்தனர்.

இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து மோசமான நிலையில் பேட்டிங் செய்தது. பின் 88 ரன்களுக்கு 4 விக்கெட், 101 ரன்களுக்கு 5 விக்கெட் என வரிசையாக விக்கெட்களை இழந்தது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கியது. முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டன் நகரின், பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்கியது. ஒருநாள் தொடரில் சொதப்பிய இந்திய அணி, டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. அந்த அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பந்துவீசும் அணிக்கு இந்தப் போட்டி சாதகமாக இருக்கும் என கருதப்பட்டதால், இந்திய அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது.

இந்திய அணி தேர்வு

இந்திய அணி தேர்வு

இந்திய அணியில் சில ஆச்சரிய தேர்வை செய்து இருந்தார் கோலி. சிறந்த விக்கெட் கீப்பரான விரிதிமான் சாஹா நீக்கப்பட்டு, இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஜடேஜா அணியில் இடம் பெறவில்லை. அஸ்வின் அணியில் ஒரே சுழற் பந்துவீச்சாளராக இடம் பெற்றார்.

சரியான தேர்வா?

சரியான தேர்வா?

இதில் குறிப்பாக பண்ட் தேர்வு செய்யப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் நல்ல பேட்ஸ்மேன் இல்லை என்று தான் ஒருநாள் மற்றும் டி20 அணியில் தன் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில், பயிற்சிப் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் ஆடியதை வைத்து அவர் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டது சரியா? என்ற கேள்வி எழுந்தது.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

இதற்கிடையே, நியூசிலாந்தில் நடைபெறும் போட்டி என்பதால், இந்தியாவில் இந்தப் போட்டி 4 மணிக்கே துவங்கியது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண விடிகாலை நான்கு மணிக்கே தயாரானார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

மோசமான துவக்கம்

மோசமான துவக்கம்

துவக்க வீரர் ப்ரித்வி ஷா 16 ரன்கள் எடுத்த நிலையில், மோசமான முறையில் சவுதி பந்துவீச்சில் பவுல்டு அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 34 ரன்கள் மட்டுமே எடுத்து பவுல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

புஜாரா, கோலி ஏமாற்றம்

புஜாரா, கோலி ஏமாற்றம்

அனுபவ பேட்ஸ்மேன்கள் புஜாரா, விராட் கோலி கை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ப[பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. புஜாரா 11 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 2 ரன்கள் எடுத்தும் நடையைக் கட்டினர். இந்தியா 88 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

சரிந்த விக்கெட்கள்

சரிந்த விக்கெட்கள்

பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த ஹனுமா விஹாரி 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 101 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே மட்டுமே தாக்குப்பிடித்து ஆடினார். இந்திய அணியின் மோசமான விக்கெட் வீழ்ச்சியை பார்க்கவா 4 மணிக்கு எழுந்தோம் என ரசிகர்கள் கடுப்பானார்கள்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

இந்திய அணி 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 109 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகிறது. ரஹானே 34, ரிஷப் பண்ட் 1 ரன் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 300 ரன்களை கடந்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

Story first published: Friday, February 21, 2020, 9:52 [IST]
Other articles published on Feb 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+