Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ : இந்தியா வைட்வாஷ் தோல்வி.. பழிக்கு பழி தீர்த்த நியூசி.. கோலிக்கு மரண அடி!

Recommended Video

IND VS NZ 3RD ODI | India's first whitewash in ODIs after 30 years

மவுன்ட் மவுங்கனி : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 297 ரன்கள் என்ற கடின இலக்கை, மிக எளிதாக 47.1 ஓவரில் எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம், ஒருநாள் தொடரை 3 - 0 என வென்று இந்திய அணியை வைட்வாஷ் செய்துள்ளது நியூசிலாந்து அணி.

வெற்றி கிடைக்குமா?

வெற்றி கிடைக்குமா?

முன்னதாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5 - 0 என ஆதிக்கம் செலுத்தி வென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் திணறியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளம் எப்படி?

மூன்றாவது போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் இதுவரை ஆடிய அணிகள் சராசரியாக 280 ரன்கள் குவிக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

கோலி முடிவு

கோலி முடிவு

கேப்டன் கோலி இந்திய அணியில் கேதார் ஜாதவ்வை நீக்கி அதிரடி முடிவை எடுத்தார். கேதார் ஜாதவ்வுக்கு பதில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய மனிஷ் பாண்டே அணியில் தேர்வு செய்யப்பட்டார். இது இந்திய அணிக்கு சாதகமான முடிவாக பார்க்கப்பட்டது. எனினும், இந்தியா கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாமல் களமிறங்கியது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் இந்தப் போட்டியிலும் சுமாரான துவக்கம் அளித்தனர். மயங்க் அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்

ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்

அடுத்து வந்த கோலி ஒரு சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினாலும், 9 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ப்ரித்வி ஷா 40 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடி அரைசதம் கடந்து 62 ரன்களில் வெளியேறினார். இந்தியா மீண்டும் தடுமாறியது.

ராகுல் சதம்

ராகுல் சதம்

அடுத்து ராகுல் - மனிஷ் பாண்டே இணைந்து அணியை மீட்டனர். மனிஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்தார். ராகுல் அபாரமாக ஆடி சதம் கடந்தார். இது அவரது நான்காவது சதம் ஆகும். 113 பந்துகளில் 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அதிரடி

நியூசிலாந்து அதிரடி

இந்திய அணி 50 ஓவர்களில் 296 ரன்கள் குவித்தது. இது பெரிய இலக்கு என்றாலும், நியூசிலாந்து அணி அதிரடியாக ரன் குவிக்கத் துவங்கியது. துவக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் 66, ஹென்றி நிக்கோல்ஸ் 80 ரன்கள் குவித்தனர்.

இந்தியா திணறல்

இந்தியா திணறல்

துவக்க வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த திணறிய இந்திய அணி, அடுத்து வில்லியம்சன் 22, ராஸ் டெய்லர் 12, நீஷம் 19 ரன்களில் வீழ்த்தி முன்னேறியது. எனினும், டாம் லாதம், கிராண்ட்ஹோம் அதிரடியை கட்டுப்படுத்த தவறியது.

நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து வெற்றி

கிராண்ட்ஹோம் 21 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஒருநாள் தொடரில் 3 - 0 என வைட்வாஷ் தோல்வி அடைந்தது இந்திய அணி.

பழி தீர்த்த நியூசிலாந்து

பழி தீர்த்த நியூசிலாந்து

டி20 தொடரில் 0 - 5 என தோல்வி அடைந்த நியூசிலாந்து, ஒருநாள் தொடரில் 3 - 0 என வெற்றி பெற்று, இந்திய அணிக்கு பலத்த பதிலடி கொடுத்து பழி தீர்த்துள்ளது. கேப்டன் கோலி தலைமையில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் அடையும் முதல் வைட்வாஷ் தோல்வி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 11, 2020, 17:19 [IST]
Other articles published on Feb 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+