Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது மாதிரி கிரிக்கெட்டில் நடந்ததே இல்லை.. வரலாறு படைத்த இந்திய அணி.. மாஸ் காட்டிய கேப்டன் கோலி!

Recommended Video

INDvsNZ T20|Highlights|நான்காவது போட்டியிலும் இந்தியா வெற்றி

வெல்லிங்டன் : கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தொடரில் அடுத்தடுத்த போட்டிகள் டை ஆவதும், அதில் ஒரே அணி வெற்றி பெறுவதும் இதுவரை நடந்ததே இல்லை.

அப்படி ஒரு புதிய வரலாற்றை எழுதி உள்ளது இந்திய அணி. இந்த இரண்டு போட்டிகளிலும் கேப்டன் கோலி நிதானமாக முடிவு எடுத்து போட்டியை கச்சிதமாக டை செய்தார்.

அதே போல, சூப்பர் ஓவரில் பும்ரா, ரோஹித் சர்மா, ராகுல் போன்ற திறன் வாய்ந்த வீரர்கள் அமைந்ததும் இந்திய அணியின் இந்த சாதனை வெற்றிக்கு முக்கிய காரணம்.

அபூர்வமான சம்பவம்

அபூர்வமான சம்பவம்

கிரிக்கெட் போட்டிகள் டை ஆவது என்பது ஒருநாள் போட்டிகள் இருந்தவரை மிக அபூர்வமான சம்பவமாக இருந்தது. அப்படி போட்டி டை ஆனால், இரு அணிகளும் வெற்றி - தோல்வி இன்றி போட்டியை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், டி20 போட்டிகள் வந்த பின் அந்த நிலை மாறி உள்ளது.

இரண்டு போட்டிகள் டை ஆனது

இரண்டு போட்டிகள் டை ஆனது

பல டி20 போட்டிகள் மிக எளிதாக டை ஆகின்றன. அந்த வகையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 தொடரில் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டி அடுத்தடுத்து டை ஆகி வியப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

மூன்றாவது டி20யில் என்ன நடந்தது?

மூன்றாவது டி20யில் என்ன நடந்தது?

மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வசம் சென்ற போட்டியை முகமது ஷமியின் அசத்தலான கடைசி ஓவரால் டை செய்த இந்திய அணி, அடுத்து சூப்பர் ஓவரில் வென்றது. நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் குவித்த 17 ரன்களை, கடைசி இரண்டு பந்தில் சிக்ஸ் அடித்து கடந்தார் ரோஹித் சர்மா.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்த நிலையில் நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. ராகுல் 39, மனிஷ் பாண்டே 50 ரன்கள் குவித்தனர். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

கடைசி ஓவரின் ஷர்துல் தாக்குர்

கடைசி ஓவரின் ஷர்துல் தாக்குர்

அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை போட்டியை எடுத்துச் சென்றது. ஷமி இந்தப் போட்டியில் இடம் பெறாத நிலையில், ஷர்துல் தாக்குர் தான் கடைசி ஓவரை வீசினார்.

டை ஆன போட்டி

டை ஆன போட்டி

கடைசி ஓவரில் ஷர்துல் தாக்குர் இரண்டு விக்கெட்களை தன் பந்துவீச்சில் வீழ்த்தினார். மேலும், இரண்டு ரன் அவுட்களும் செய்யப்பட்டன. நியூசிலாந்து அணி 6 ரன்கள் மட்டுமே எடுக்க போட்டி டை ஆனது. இந்தப் போட்டியும் சூப்பர் ஓவருக்கு சென்றது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

பும்ராவின் பந்து வீச்சில் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ராகுல், கோலி சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தனர். ராகுல் முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து மிரட்டினார். பின் கோலி ஐந்தாவது பந்தில் இலக்கை எட்டச் செய்தார்.

புதிய வரலாறு

புதிய வரலாறு

இருதரப்பு கிரிக்கெட் தொடரில், தொடர்ந்து இரண்டு போட்டிகள் டை ஆகும் சம்பவம் இதுவரை நடந்தது இல்லை, மேலும், அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்றதும் புதிய வரலாறாக மாறி உள்ளது. நியூசிலாந்து அணி சோகமான சூப்பர் ஓவர் வரலாறை மீண்டும் தொடர்ந்து வருகிறது.

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி இதுவரை 15 போட்டிகளை டை செய்துள்ளது. அதிக போட்டிகளை டை செய்த அணிகளில் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் 14 போட்டிகளுடன் உள்ளது.

நியூசிலாந்து சோகம்

நியூசிலாந்து சோகம்

அதே போல, நியூசிலாந்து அணி 8 சூப்பர் ஓவரில் விளையாடி அதில் ஏழு முறை தோல்வி அடைந்துள்ளது. சூப்பர் ஓவரில் படு மோசமான ரெக்கார்டை வைத்துள்ளது நியூசிலாந்து அணி. அதே சமயம், இந்திய அணி தான் ஆடிய இரண்டு சூப்பர் ஓவர் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளது.

Story first published: Friday, January 31, 2020, 19:51 [IST]
Other articles published on Jan 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+