
நியூசிலாந்து டி20 தொடர்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி உள்ளிட்ட பலருக்கும் இந்த தொடரில் ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படவுள்ளார். இதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஓய்வெடுத்துள்ளதால் அவருக்கு பதிலாக வி.வி.எஸ்.லக்ஷ்மண் பயிற்சியாளராக சென்றுள்ளார்.

லக்ஷ்மணின் புகழாரம்
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவது குறித்து பயிற்சியாளர் லக்ஷ்மண் கூறியுள்ளார். அதில், அவர் ஒரு சிறந்த தலைவர். அவர் குஜராத் அணிக்காக என்ன செய்தார் என்பதை பார்த்திருப்போம். அணியின் தலைவராக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே கோப்பையை வென்றுக்கொடுப்பது என்பது சாதாரண சாதனை இல்ல.

வீரர்களின் தலைவன்
அயர்லாந்து தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுடன் நிறைய நேரத்தை நான் செலவிட்டுள்ளேன். அவர் திட்டங்களில் மட்டும் சிறந்தவர் கிடையாது. களத்தில் மிகவும் நிதானமாகவும், சாந்தமாகவும் இருக்கிறார். இது ஒரு கேப்டனாக மிக முக்கியமான பண்பாகும். அவரை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம். முக்கியமாக வீரர்களின் கேப்டனாக பாண்ட்யா இருக்கிறார்.

நிரந்தர கேப்டன்
35 வயதாகும் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டின் கேப்டன்சியில் இருந்து விலகி, இனி மற்ற 2 வடிவ கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் ஹர்திக் பாண்ட்யா முழு நேர கேப்டனாக செயல்படவும் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications