Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு பின் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய 5 கேப்டன்கள் யார்? அடுத்த கேப்டன்சி யாருக்கு?

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற விவாதம் சமீப காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தோனிக்கு பின் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்களாக இருந்த ஐந்து பேர் யார்? இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பதையும் பார்க்கலாம்.

விராட் கோலி

2014 ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். அப்போது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக ஆனார். அவர் 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார். இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையும் விராட் கோலியை சேரும். கோலி தலைமையில் 68 போட்டிகளில் ஆடி உள்ள இந்திய அணிக்கு 40 வெற்றிகளை பெற்று உள்ளது. கோலியின் டெஸ்ட் கேப்டன்சி வெற்றி சதவீதம் 58.82 ஆகும்.

ind vs nz india virat kohli


அஜின்க்யா ரஹானே

விராட் கோலியின் கேப்டன்சியின் போது இடையே அவர் விடுப்பு எடுத்த போதெல்லாம் அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே இந்திய அணியை வழி நடத்தினார். அவர் இதுவரை 6 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். அதில் நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

கே எல் ராகுல்

2021 - 22 காலகட்டத்தில் அஜின்க்யா ரஹானே அணியில் இடம் பெறாத போது மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார் கே எல் ராகுல். அந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியும் சந்தித்து இருந்தது.

ரோஹித் சர்மா

விராட் கோலிக்கு பின் 2022 முதல் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். அவர் இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் 12 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார். ரோஹித் சர்மாவின் வெற்றி சதவீதம் 66.66 ஆக உள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரு போட்டிக்கு மட்டும் பும்ரா கேப்டனாக இருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தற்போது அவர் மீண்டும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.

தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். அவர் அடுத்த மாதம் துவங்க உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தற்காலிகமாக விடுப்பு எடுக்க இருக்கிறார். அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்தப் போவது யார்? என்ற விவாதம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிசிசிஐ தற்போது நடைபெற உள்ள நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியின் துணை கேப்டனாக பும்ராவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் அவரே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தற்காலிக கேப்டனாக இருப்பார் என தெரிகிறது.

Story first published: Tuesday, October 15, 2024, 20:20 [IST]
Other articles published on Oct 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+