Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: 5வது டி20 முடியும் முன்பே சாம்சனை வீட்டுக்கு அனுப்பிய கம்பீர்.. புதிய பொறுப்பில் இசான் கிஷன்

திருவனந்தபுரம்: ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகும் நிலையில், திருவனந்தபுரத்தில் சொந்த மண்ணில் ஆடியபோதும் சஞ்சு சாம்சன் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்து கேரள ரசிகர்களை ஏமாற்றினார். இதன் காரணமாக, தற்போது சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அந்த பணியை இஷான் கிஷன் மேற்கொள்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டியில், சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்திருந்தார். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 6 பந்துக்கு 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். லாக்கி பெர்குசன் வீசிய 3வது ஓவரில் அவர் கேட்ச் ஆகி வெளியேறினார். இத்தொடரில் அவர் ஒரு கோல்டன் டக் அவுட்டும் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்சன் ஆட்டமிழந்ததும், கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் மயான அமைதி நிலவியது. இத்தொடரில் சாம்சன் தொடர்ந்து திணறிவருவதால், உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே முடிந்தது.ஐந்து போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கிய 31 வயதான சாம்சன், 9.20 சராசரியிலும் 135.29 ஸ்ட்ரைக் ரேட்டிலும் மொத்தமாக 46 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பிப்ரவரி 7 அன்று தொடங்கும் உலகக் கோப்பைக்கான அவரது வாய்ப்புக்கு இந்தப் போட்டி மிக முக்கியமானது.

சாம்சன் திணறும் நிலையில், இஷான் கிஷன் சிறப்பான பார்மில் உள்ளார். ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் 32 பந்துகளில் அசத்தலான 76 ரன்கள் குவித்தார். தற்போது 5வது டி20 போட்டியில் இசான் கிஷன் சதம் அடித்துள்ளார். இந்த சூழலில் இந்திய அணி பந்துவீசும் போது, சஞ்சு சாம்சனுக்கு பதில் இசான் கிஷனே விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதன் மூலம், டி20 உலககோப்பையில் சாம்சன் இடம் பறிப்போவது உறுதியானது.

இழந்த பார்மை மீட்டெடுக்க இது சாம்சனுக்கு இந்தப் போட்டி கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது. ஆயினும், பிப்ரவரி 4 அன்று நாவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். இந்தப் போட்டி அவருக்கு மற்றொரு வாய்ப்பாக அமையக்கூடும்.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026க்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

Story first published: Saturday, January 31, 2026, 21:27 [IST]
Other articles published on Jan 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+