Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமுக்காக என்ன வேணாலும் செய்வேன்! அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்!

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூத்த வீரர் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.

மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தடுமாறிய நிலையில், அவர் மட்டுமே அவ்வப்போது விக்கெட் எடுத்து இந்திய அணியை பின்னடைவில் இருந்து காப்பாற்றினார்.

ஜெட் லேக் சிக்கல்

ஜெட் லேக் சிக்கல்

அவர் போட்டி துவங்க மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் தான் நியூசிலாந்து சென்று அடைந்தார். அதன் பின் "ஜெட் லேக்" காரணமாக தூக்கம் இன்றி தவித்து வருகிறார். இந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் அணிக்காக உழைத்து வருகிறார்.

காலில் காயம்

காலில் காயம்

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு மூன்று வாரங்கள் முன்பு ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடி வந்த இஷாந்த் சர்மா, வலது காலில் காயமடைந்தார். காலில் இரண்டு இடங்களில் தசை நார் கிழிந்து இருந்தது. அதனால், அவர் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது.

ஆறு வாரம் ஆகலாம்?

ஆறு வாரம் ஆகலாம்?

தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்து வந்தார் இஷாந்த் சர்மா. அவர் குணமாக ஆறு வாரம் வரை ஆகலாம் என முதலில் கூறப்பட்டது. அதனால், அவர் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது என்ற நிலை இருந்தது.

நியூசிலாந்து பயணம்

நியூசிலாந்து பயணம்

எனினும், காயத்தில் இருந்து மீண்டு வந்த இஷாந்த் சர்மா, சரியாக டெஸ்ட் தொடர் துவங்கும் முன்பு போட்டிகளில் பங்கேற்க தயார் ஆனார். டெஸ்ட் தொடருக்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில், நியூசிலாந்து புறப்பட்டு சென்றார் இஷாந்த் சர்மா.

நேர மாற்றம்

நேர மாற்றம்

நியூசிலாந்து செல்ல 24 மணி நேரம் ஆகும். அதனால், இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன நேர மாற்றத்துக்கு ஏற்ப உடலை தயார் செய்ய சில நாட்கள் ஆகும். டி20 தொடருக்கு முன் நியூசிலாந்து வந்த மற்ற இந்திய வீரர்களுக்கும் இதே பிரச்சனை இருந்தது.

இஷாந்த் தவித்தார்

இஷாந்த் தவித்தார்

அதே போல, இஷாந்த் சர்மாவுக்கும் சிக்கல் ஏற்பட்டது. அதிலும், அவர் நாள் முழுவதும் களத்தில் இருக்க வேண்டிய டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற நிலையில், ஜெட் லேக் சிக்கலில் இருந்து மீள முடியாமல் தவித்தார்.

குறைவான தூக்கம்

குறைவான தூக்கம்

போட்டிக்கு முந்தைய தினம் வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே தூங்கினார். முதல் நாள் அன்று இந்தியா பேட்டிங் செய்ததால், இஷாந்த் சர்மா களத்துக்கு வரவில்லை. போட்டியின் முதல் நாள் இரவு 3 மணி நேரம் மட்டுமே தூங்கி இருக்கிறார்.

துல்லியமான பந்துவீச்சு

துல்லியமான பந்துவீச்சு

சரியான தூக்கம் இல்லாததால் அவர் உடல் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனினும், இரண்டாம் நாள் ஆட்டத்தில் சமாளித்து 15 ஓவர்கள் வரை வீசினார் இஷாந்த் சர்மா. அவரது பந்துவீச்சு துல்லியமாக இருந்தது. நியூசிலாந்து வீரர்கள் அவரது பந்துவீச்சில் அதிக டாட் பால் ஆடினர்.

மூன்று விக்கெட்கள்

மூன்று விக்கெட்கள்

இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி மூன்று டாப் ஆர்டர் வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தினார். இந்தியா எடுத்த முதல் மூன்று விக்கெட்களும் இஷாந்த் சர்மா எடுத்த விக்கெட்கள் தான். அதன் பின்னர் ஷமி 1, அஸ்வின் 1 விக்கெட் எடுத்தனர்.

மூத்த வீரர்

மூத்த வீரர்

96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள இஷாந்த் சர்மா, தற்போது இந்திய டெஸ்ட் அணியில் ஆடும் அனைவருக்கும் மூத்த வீரர் ஆவார். அவர் அணிக்காக தன் உடலை வருத்திக் கொண்டு போட்டியில் பங்கேற்று இருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Saturday, February 22, 2020, 21:22 [IST]
Other articles published on Feb 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+