Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. பும்ராவுக்கு அடித்த ஜாக்பாட்.. தேடி வந்த பதவி

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அந்த அணியின் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி :

ind vs nz india new zealand

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப்

சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது பும்ரா இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களின் போது பும்ரா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்தார்.

ஆனால், வங்கதேச டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாக யாரையும் அறிவிக்காததால் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லை டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்க முயற்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த தொடரின் துவக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அந்த சமயத்தில் யார் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார்? என்ற சந்தேகமும் இருந்தது.

அதை தெளிவுபடுத்தும் வகையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் பும்ரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம், அவரே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போதும் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாகவும் செயல்படுவார் என்பது தெளிவாகி உள்ளது.

மேலும், பிசிசிஐ அறிவித்துள்ள நியூசிலாந்து தொடருக்கான அணியில் நான்கு ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்திய மண்ணில் நடைபெறும் தொடருக்கு ரிசர்வ் வீரர்களை இதுவரை அறிவித்தது இல்லை. ஆனால், முதன்முறையாக நான்கு ரிசர்வ் வீரர்களை அறிவித்து ஆச்சரியம் அளித்திருக்கிறது பிசிசிஐ.

ஹர்ஷித் ரானா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய நால்வரும் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். நியூசிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடிய அதே இந்திய அணி அப்படியே நியூசிலாந்து தொடரிலும் விளையாட உள்ளது.

Story first published: Saturday, October 12, 2024, 8:33 [IST]
Other articles published on Oct 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+