For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: வீட்டுக்கு கிளம்புங்க.. 54 டெஸ்ட் ஆடிய வீரரை காலி செய்த சர்ஃபராஸ் கான்.. என்ன நடந்தது?

புனே : இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட்டு இருக்கிறார். இது மிகப் பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அவரது இடத்தை சர்ஃபராஸ் கான் பிடித்து விட்டார். அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் கே எல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.

கே எல் ராகுல் இந்திய அணிக்காக 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2981 ரன்கள் எடுத்துள்ளார். 8 சதம் மற்றும் 15 அரை சதங்கள் அடித்து இருக்கிறார். ஆனால், ராகுலின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 33.87 என்பதாகவே உள்ளது. அவர் முக்கியமான போட்டிகளில் ரன் குவித்து இருந்தாலும் தொடர்ந்து ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனத்தை தொடர்ந்து சந்தித்து வந்தார்.

ind vs nz india kl rahul

அவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற சர்ஃபராஸ் கான் தற்போது அவரது இடத்தை தட்டிப் பறித்து இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது கே எல் ராகுல் காயத்தால் விலகி இருந்த நிலையில் சர்ஃபராஸ் கான் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று அரை சதம் அடித்து இருந்தார்.

அடுத்து தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக சர்பராஸ் கான் அணியில் இடம் பெற்று இருந்தார். முதல் டெஸ்டில் இக்கட்டான நிலையில் சர்ஃபராஸ் கான் 150 ரன்கள் அடித்து அணியில் தனது இடத்தை உறுதி செய்து இருக்கிறார். அவர் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்களை அடித்து இருப்பதால் இனியும் அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க முடியாது என்ற முடிவை எடுத்து இக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.

அதனால், பல வாய்ப்புகளை பெற்றும் ரன் குவிக்காத கே எல் ராகுல் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முன் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் இடம் பெற்று இருந்தார். அந்த தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 16 மற்றும் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

வங்கதேச டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் 68 ரன்கள் சேர்த்து இருந்தார் கே எல் ராகுல். ஆனால் அது பேட்டிங் செய்ய எளிதான சூழ்நிலையில் அடிக்கப்பட்ட அரை சதம் ஆகும். அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார் ராகுல். இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியமான கட்டத்தில் 12 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இக்கட்டான நேரத்திலும் கை கொடுக்காத ராகுல் மோசமான பேட்டிங் சராசரியும் வைத்து இருப்பதால் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், அதிலும் ராகுலுக்கு இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. சர்ஃபராஸ் கான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பிளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, October 24, 2024, 10:54 [IST]
Other articles published on Oct 24, 2024
English summary
IND vs NZ: KL Rahul might never find his place in the Indian test team again
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+