For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்களுக்கு ஆடவே தெரியலை.. இந்திய வீரர்களை பச்சையாக கிண்டல் செய்த இளம் நியூசி. வீரர்!

கிறைஸ்ட்சர்ச் : இந்திய அணியின் பேட்டிங் நியூசிலாந்து நாட்டில் பல்லிளித்து வரும் நிலையில், இளம் நியூசிலாந்து பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன், இந்திய வீரர்களுக்கு ஷார்ட் பால் வீசினால் ஆடத் தெரியவில்லை என வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.

Recommended Video

IND VS NZ 2ND TEST | New zealand beat India by 7 wickets

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து, இரண்டாவது போட்டியிலும் தோல்வியை நோக்கி ஆடி வந்த நிலையில், ஜேமிசன் இப்படி கூறி இருக்கிறார்.

நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசனுக்கு இது தான் அறிமுக டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - நியூசிலாந்து இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது. அதன் காரணமாக அந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸிலும் இந்திய அணியால் 200 ரன்களை கூட தாண்ட முடியவில்லை. தோல்வியும் அடைந்தது.

பேட்டிங் பலவீனம்

பேட்டிங் பலவீனம்

இந்திய பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்களின் தாக்குதல் பாணி பந்துவீச்சுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறினர். பவுன்ஸ் ஆகி வரும் ஷார்ட் பந்துகளை அடிக்க முடியாமல், அனுபவ வீரர்களான கோலி, புஜாரா ஆகியோரும் ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது டெஸ்டில்..

இரண்டாவது டெஸ்டில்..

இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸிலும் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டத்தை தொடர்ந்தனர். ப்ரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி என மூன்று வீரர்கள் அரைசதம் அடித்தாலும் அவர்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை.

கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்

கோலி இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்க்ஸ்கள் பேட்டிங் செய்து வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் ஏமாற்றம் அளித்தார். அவர் உட்பட இந்திய வீரர்கள் பவுன்ஸ் ஆகி வந்த பந்துகளை சந்திக்க திணறினர். பலரும் அப்படி ஒரு பவுன்ஸ் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

அறிமுக வீரர் ஜேமிசன்

அறிமுக வீரர் ஜேமிசன்

இந்திய பேட்ஸ்மேன்களின் இந்த மோசமான தடுமாற்றத்துக்கு அறிமுக வீரர் கைல் ஜேமிசனும் ஒரு முக்கிய காரணம். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் அவர் அறிமுகம் ஆனார். தன் முதல் போட்டியிலேயே அவர் அதிரடியாக 25 ரன்கள் மற்றும் 2 முக்கிய விக்கெட்கள் வீழ்த்தி தன் அணியை வெற்றி பெற வைத்தார்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

தொடர்ந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார், இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட ஜேமிசன் அனாயசமாக ஷார்ட் பால் வீசி பந்தை பவுன்ஸ் செய்கிறார். அதை சமாளிக்க இந்திய வீரர்கள் தினறுகின்றனர்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

இந்திய அணி தடுமாறி வருவது பற்றி இரண்டாவது டெஸ்டின் இடையே பேசிய அவர், இந்திய வீரர்கள் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக என்ன செய்வது என தெரியாமல் திணறுவதாக கூறினார். அறிமுக வீரர் ஒருவரே இந்திய அணியை பற்றி இப்படி கூறி இருப்பது, இந்திய அணியின் பரிதாப நிலையை உணர்த்துவதாக உள்ளது.

வெளிப்படையான கிண்டல்

வெளிப்படையான கிண்டல்

முதல் டெஸ்ட் போட்டி போல பிட்ச் இல்லாததால் இந்திய வீரர்கள் இரண்டாவது போட்டியில் ஷாட் அடித்து ஆடினார்கள். பேட்டிங் செய்ய ஆடுகளமும் ஓரளவு ஒத்துழைத்தது. ஆனாலும், அவர்கள் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக என்ன செய்வது என தெரியாமல் திணறுகின்றனர் என வெளிப்படையாக கூறினார்.

தோல்வியை நோக்கி..

தோல்வியை நோக்கி..

இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸிலும் இந்திய அணி விக்கெட்களை பறிகொடுத்து இருக்கிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர் முடிவில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து, தோல்விக்கு அருகே உள்ளது இந்திய அணி.

Story first published: Sunday, March 1, 2020, 17:05 [IST]
Other articles published on Mar 1, 2020
English summary
IND vs NZ : Kyle Jamieson says India indecisive against short ball. This clearly tells us the condition of Indian players in New Zealand.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+