Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா இது? முதல் மேட்ச்சிலேயே புஜாரா, கோலி விக்கெட்டை தட்டித் தூக்கிட்டாரு.. மிரண்ட ரசிகர்கள்!

Recommended Video

IND VS NZ 1ST TEST DAY 1 | Kyle Jamieson took Pujara and Kohli wickets

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டு சிறந்த அனுபவ பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை தன் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி மிரள வைத்தார் கைல் ஜேமிசன்.

அவருக்கு இது தான் அறிமுக டெஸ்ட் போட்டி. தன் முதல் போட்டியிலேயே அவரது பந்துவீச்சில் முக்கிய விக்கெட்களை எடுத்தது வியப்பை அளித்தது.

இந்திய அணி முதல் டெஸ்டில் விரைவாக விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. ஜேமிசன் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரிஷப் பண்ட், அஸ்வின் அணியில் ஆடும் நிலையில், சாஹா, ஜடேஜா நீக்கப்பட்டுள்ளனர்.

ஜேமிசன் அறிமுகம்

ஜேமிசன் அறிமுகம்

நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடினார். முன்னதாக அவர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் சிறப்பாக ஆடியதை அடுத்து டெஸ்ட் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் மோசமாக தடுமாறியது. துவக்க வீரர் ப்ரித்வி ஷா 16 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 34 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

புஜாரா விக்கெட்

புஜாரா விக்கெட்

அடுத்து புஜாரா சிறப்பாக ஆடி அணியை மீட்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கைல் ஜேமிசன் அவுட்சைட் ஆஃப் சைடு வீசிய பந்தை, தடுக்க நினைத்து தவறான லைனில் ஆடிய புஜாரா, எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். 11 ரன் மட்டுமே எடுத்தார் அவர்.

விராட் கோலி விக்கெட்

விராட் கோலி விக்கெட்

16வது ஓவரில் புஜாரா விக்கெட்டை வீழ்த்திய நிலையில், 18வது ஓவரில் கோலி விக்கெட்டை வீழ்த்தினார் ஜேமிசன். கோலியும் அவுட் சைடு ஆஃப் திசையில் வந்த பந்தை அடிக்க நினைத்து, ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

விஹாரியும் காலி

விஹாரியும் காலி

பின்னர், ரஹானே - ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தனர். விஹாரி பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த நிலையில், இந்தப் போட்டியில் அவர் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்துவீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார். 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் ஜேமிசன்.

ஜேமிசன் அசத்தல் அறிமுகம்

ஜேமிசன் அசத்தல் அறிமுகம்

டெஸ்ட் போட்டியில் கைல் ஜேமிசன் சிறந்த அறிமுகம் பெற்றார். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என கருதப்படும் புஜாரா விக்கெட்டையும், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி விக்கெட்டையும் தன் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி மிரட்டினார் ஜேமிசன்.

ஒருநாள் போட்டி அறிமுகம்

ஒருநாள் போட்டி அறிமுகம்

முன்னதாக இந்திய அணிக்கு எதிரான தன் அறிமுகப் போட்டியில் 2 விக்கெட்கள் எடுத்ததுடன், 25 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி அதிக ஸ்கோர் எடுக்கவும், வெற்றி பெறவும் முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

முதல் நியூசிலாந்து வீரர்

முதல் நியூசிலாந்து வீரர்

சர்வதேச போட்டியில் தன் அறிமுக போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் 25 வயது ஆன ஜேமிசன். ஆறு அடி, எட்டு அங்குல உயரம் கொண்ட ஜேமிசன் தன் உயரத்தை பயன்படுத்தி பந்துவீச்சில் கலக்குகிறார்.

நியூசிலாந்து ஆதிக்கம்

நியூசிலாந்து ஆதிக்கம்

முதல் போட்டியில் முதல் நாளில், நியூசிலாந்து அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது. 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த இந்திய அணி, அடுத்து 101 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்தது. துணை கேப்டன் ரஹானே மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார்.

Story first published: Friday, February 21, 2020, 10:56 [IST]
Other articles published on Feb 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+