Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 3 விக்கெட்.. வெறியாட்டம் ஆடிய 2 வீரர்கள்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த நியூசி!

வெல்லிங்டன் : முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து அணியின் பின் வரிசை வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

Recommended Video

INDvsNZ 1st Test | New Zealand won by 10 wickets | இந்தியாவுக்கு மோசமான தோல்வி

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், நியூசிலாந்து அணியை 250 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வாய்ப்பு இருந்தது.

ஆனால், பின்வரிசை வீரர்களின் அதிரடியால் அந்த வாய்ப்பை நழுவ விட்ட இந்திய அணி, முதல் இன்னிங்க்ஸில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - நியூசிலாந்து இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

கடும் சவால்

கடும் சவால்

பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் இந்திய அணிக்கு பேட்டிங் செய்வது கடும் சவாலாக இருந்தது. முதல் இன்னிங்க்ஸில் மயங்க் அகர்வால் 34, ரஹானே 46, ஷமி 21 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட 20 ரன்களை தொடவில்லை.

ரன்கள்

ரன்கள்

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் வெறும் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி தலைமையில் இது இந்திய அணியின் இரண்டாவது குறைந்த முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் ஆகும். அடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

நியூசிலாந்து அணியை 200 ரன்களுக்குள் வீழ்த்தினால், இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும் என கருதப்பட்டது. இந்த நிலையில், டாம் பிளண்டல் 30, கேன் வில்லியம்சன் 89, ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தனர்.

225 ரன்களுக்கு 7 விக்கெட்

225 ரன்களுக்கு 7 விக்கெட்

நியூசிலாந்து அணி 225 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. இஷாந்த் சர்மா, அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வந்தனர். அடுத்த 3 விக்கெட்களை 250 ரன்களுக்குள் இந்தியா வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடந்தால், இந்திய அணி இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி இருக்கும்.

கிராண்ட்ஹோம் ஆட்டம்

கிராண்ட்ஹோம் ஆட்டம்

ஆனால், களத்தில் இருந்து பேட்ஸ்மேன் கிராண்ட்ஹோம் தாக்குப் பிடித்து ஆடி வந்தார். ஆனால், அவர் ரன் குவித்ததை விட, பின் வரிசை வீரர்கள் அதிரடியாக ரன் குவித்தனர். அது இந்திய அணிக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியது.

ஜேமிசன் அதிரடி

ஜேமிசன் அதிரடி

பந்துவீச்சில் 4 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணிக்கு சரிவை ஏற்படுத்திய கைல் ஜேமிசன், பேட்டிங்கிலும் வேகமாக ரன் குவித்தார். அவர் 4 சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து 45 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். கிராண்ட்ஹோம் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ட்ரென்ட் பவுல்ட் அதிரடி

ட்ரென்ட் பவுல்ட் அதிரடி

10வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஜாஸ் பட்டேல் - ட்ரென்ட் பவுல்ட் மேலும் 38 ரன்கள் எடுத்தனர். அஜாஸ் பட்டேல் ஏற்கனவே 4 ரன்கள் எடுத்த நிலையில், ட்ரென்ட் பவுல்ட் மட்டுமே 38 ரன்களையும் தனி ஆளாக எடுத்தார்.

அதிரடி சிக்ஸர்கள்

அதிரடி சிக்ஸர்கள்

ட்ரென்ட் பவுல்ட் 5 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். நியூசிலாந்து அணியின் கடைசி மூன்று பேட்ஸ்மேன்களான ஜேமிசன், அஜாஸ் பட்டேல் மற்றும் ட்ரென்ட் பவுல்ட் மூவரும் சேர்ந்து 7 ஃபோர், 5 சிக்ஸ் அடித்து இருந்தனர்.

இந்தியா சறுக்கல்

இந்தியா சறுக்கல்

225 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்த நியூசிலாந்து அணி, 100.2 ஓவரில் 348 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஒரு முறை பின் வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த தவறினர். அடுத்து 183 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் ஆடிய இந்திய அணியில் ப்ரித்வி ஷா 14, புஜாரா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

Story first published: Sunday, February 23, 2020, 10:37 [IST]
Other articles published on Feb 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+