Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமிக்கு அடிச்ச லக்.. டீமில் இல்லை என்றாலும் ஆஸ்திரேலிய தொடரில் ஆடுவார்.. எப்படி தெரியுமா?

மும்பை: அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான அணியில் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் ஐந்து போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால், அதற்கு மாறாக முகமது ஷமி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இடையே இந்திய அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் அணியில் இடம் பெற்று போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் முடிவில் முகமது ஷமிக்கு காலில் வலி ஏற்பட்டிருந்தது.

ind vs nz india new zealand

அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு உடற்தகுதியை மீட்கும் முயற்சியில் இறங்கினார். இதன் இடையே அவருக்கு மீண்டும் முழங்காலில் வலி ஏற்பட்டது. அதனால், அவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை.

அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும், அடுத்த வாரம் முதல் ரஞ்சி ட்ராபி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாட உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஞ்சி ட்ராபி தொடரில் இரண்டு போட்டிகளில் முகமது ஷமி விளையாட இருக்கிறார். அப்போது அவரால் முழு உடற்தகுதியோடு நீண்ட நேரம் பந்து வீச முடிந்தால் அவர் நேரடியாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் இணைவார் எனவும் அந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் இருந்து அவர் விளையாடுவார் எனவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்) , அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

ரிசர்வ் வீரர்கள் : முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது

Story first published: Monday, October 28, 2024, 16:53 [IST]
Other articles published on Oct 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+