Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: மீண்டும் 'மாஸ்' என்ட்ரி கொடுக்கும் ஸ்விங் கிங் முகமது ஷமி? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் ஷமி தனது வருகைக்கு தயாராகி வருகிறார்.

கடைசியாக 2025 மார்ச் மாதம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஷமி விளையாடியிருந்தார். அதன் பிறகு காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு, தற்போது மீண்டும் அவர் சர்வதேச அரங்கில் கால் பதிக்கவுள்ளார்.

ஜனவரி 11ம் தேதி வதோதராவில் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.

IND vs NZ Mohammed Shami Set for Team India Comeback in ODI Series Against New Zealand

பட்டியலில் ஷமி

இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "முகமது ஷமி தேர்வுக் குழுவின் விவாதத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் அணியை விட்டு முழுமையாக விலக்கப்படவில்லை. அவருடைய உடற்தகுதி மட்டுமே முக்கிய கவலையாக இருந்தது. ஆனால், தற்போது அவர் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் அணிக்குத் தேவை. 2027 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம். நியூசிலாந்து தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் போட்டிகளில் மிரட்டல் ஃபார்ம்

முகமது ஷமி தற்போது உள்ளூர் போட்டிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் (SMAT 2025) பெங்கால் அணிக்காக ஆடிய அவர், வெறும் 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை அள்ளித் குவித்தார். அதேபோல விஜய் ஹசாரே ட்ராபியிலும் 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, "நான் இன்னும் ராஜாவா தான் இருக்கேன்" என்பதை நிரூபித்துள்ளார். இந்த அபாரமான ஃபார்ம் தான் தேர்வாளர்களை அவர் பக்கம் திரும்ப வைத்துள்ளது.

பும்ராவுக்கு ஓய்வு - ஷமிக்கு பொறுப்பு

இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சு படையை வழிநடத்தும் பொறுப்பு ஷமிக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த தென்னாப்பிரிக்கத் தொடரில் பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவு சோபிக்காத நிலையில், ஷமியின் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் அவசியம்.

அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா போன்ற இளம் வீரர்களுக்கு ஷமியின் வழிகாட்டுதல் பெரிய பலமாக அமையும். 2023 உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஷமி, மீண்டும் அதே வேகத்துடனும் துல்லியத்துடனும் பந்துவீசுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Story first published: Wednesday, December 31, 2025, 7:57 [IST]
Other articles published on Dec 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+