மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தங்களுடைய முதல் இன்னிங்ஸ் களம் இறங்கிய நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி தற்போது 134 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை அன்று கூடுதலாக 200 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகிவிடும்.

இந்த நிலையில் நியூசிலாந்தின் விக்கெட்டுகளை எடுக்க இந்திய வீரர்களும் கடுமையாக போராடினர். ஆனால் இந்தியா பந்து வீசும் போது ஆடுகளத்தில் போதிய அளவில் ஈரப்பதம் இல்லை. இதன் காரணமாக இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை எடுக்க போராடினர். ஒவ்வொரு அணி வீரர்களும் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றால் பேட்ஸ்மேன் வம்பு இழுத்து அவருடைய கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வர்.
அந்த வகையில் இந்திய அணி வீரர் சிராஜும் விக்கெட் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் நியூசிலாந்து வீரர் கான்வேவை வம்புக்கு இழுத்தார். பொதுவாக இவ்வாறு செய்யும்போது விக்கெட்டுகள் விழும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சிராஜ் சும்மா இருந்தவரை சீண்டி விட, கான்வே அதன் பிறகு பவுண்டரி பௌண்டரிகளாக அடித்து ரன்களை சேர்த்தார். இதுதான் நியூசிலாந்து அணியின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்ந்தது.
ஒரு கட்டத்தில் சிஎஸ்கே வீரர் கான்வே, ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் சேர்க்கிறது போல் அடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் தெரியாத்தனமாக வாயை விட்டு மாட்டிக்கொண்டோமே என்பது போல் சிராஜ் முழித்து வந்தார். சிராஜ் 7 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் தடுமாறி வருகிறார். இதில் பல சிராஜ் தேவையில்லாமல் வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.