Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: உலகின் சிறந்த அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது பெருமை.. நியூசி. கேப்டன் கருத்து

மும்பை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் போராடி தோல்வியடைந்த பின், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து பெற்ற முதல் வெற்றி இது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த வெற்றி குறித்துப் பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல், "என் அணியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். எங்கள் அணி வீரர்கள் இன்று முழுமையான ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்" என்றார்.

"ஆட்டம் பாதியிலே நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். ஏனென்றால் நாங்கள் நன்றாகப் பந்து வீசி இந்தியாவை குறிப்பிட்ட இலக்கிற்குள் கட்டுப்படுத்தினோம். இது நியூசிலாந்தின் வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன், அழுத்தத்தையும் சிறப்பாகக் கையாண்டோம்" என்று பிரேஸ்வெல் விளக்கினார்.

பேட்டிங்கில் டாரல் மற்றும் யங் ஆகியோர் சிறப்பாக விளையாடி, ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து கவர்ந்து சென்றதாக கேப்டன் பாராட்டினார். "எங்கள் அணி வீரர்கள் களச்சூழலை அறிந்து சிறப்பாக ரன்களைச் சேர்த்தனர். உலகின் சிறந்த அணிக்கு எதிராக, அதன் சொந்த மண்ணில் இவ்வாறு அபாரமாக விளையாடியது பெருமைக்குரியது" என்றும் அவர் கூறினார்.

அறிமுகப் பந்துவீச்சாளர் ஜேடனின் செயல்பாட்டையும் பிரேஸ்வெல் பாராட்டினார். "இந்தியா போன்ற நாடுகளில் தனது முதல் போட்டியில் விளையாடுவது எளிதான காரியம் கிடையாது, ஆனால் நெருக்கடியான கட்டத்தில் அவர் சிறப்பாக பந்து வீசினார்" என்று மைக்கேல் பிரேஸ்வெல் குறிப்பிட்டார். இதுவரை இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வெல்லாத நியூசிலாந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மூன்றாவது போட்டியில் வென்றால் புதிய வரலாறு படைக்கும்.

Story first published: Thursday, January 15, 2026, 0:19 [IST]
Other articles published on Jan 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+