Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ:இந்தியாவுக்கு எதிராக 200 ரன்கள் அடித்தாலும், பாதுகாப்பு கிடையாது- நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர்

விசாகப்பட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்ற நிலையில் தற்போது நியூசிலாந்து அணி முதல் வெற்றியை தற்போது பெற்றிருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 215 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறது. இந்திய அணி 165 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாட்ணர், இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள் பவர் பிளேவில் இன்று நாங்கள் எப்படி விளையாடினோமோ, அதே போல் தான் இந்த தொடர் முழுவதும் இந்தியா எங்களுக்கு எதிராக விளையாடியது. எனவே நாங்கள் ஒரு நல்ல இலக்கை எட்டினோம். ஏனென்றால் 200 ரன்கள் எடுத்தால் கூட அது இந்தியாவுக்கு எதிராக பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.

அதுவும் கடந்த போட்டியில் நடந்ததை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், 150 ரன்கள் என்ற இலக்கை 10 ஓவர்களில் எட்டி விட்டார்கள். எனவே நாங்கள் அந்தப் போட்டிக்கு பிறகு மீண்டும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் அணி பவுலர்கள் பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

நாங்கள் பேட்டிங் செய்யும்போது, நடுவில் அவர்களில் சில விக்கெட்டுகளை இழந்தோம். அதுதான் பிரச்சனையாக இருக்கின்றது. எனினும் இவ்வளவு நல்ல ஒரு தொடக்கத்தை பெற்றால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இருப்பினும் டேரல் மிட்செல் மற்றும் பென் போக்ஸ் ஆகியோர் இறுதியில் ரன்களை குவித்து அழகாக முடித்தார்கள்.

நான் ஆரம்பத்திலே சொல்வது போல், இந்தியாவை இந்திய மண்ணில் எதிர்கொள்வதை விட உலககோப்பைக்கு சிறந்த முறையில் தயாராக முடியாது. எங்கள் அணியில் ஒரு இரண்டு வீரர்கள் கடைசி போட்டிக்கு திரும்புகிறார்கள். இதன் மூலம் அணியின் பலம் அதிகரிக்கும். எனினும் அதைவிட நமது செயல் திட்டங்களில் சரியாக இருக்க வேண்டும். வீரர்கள் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து, என்ன செய்ய வேண்டுமோ அதை களத்தில் சரியாக செய்ய வேண்டும்.

அப்போதுதான் உலககோப்பையில் ஜொலிக்க முடியும். இந்த ஆடுகளும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாமல் பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருந்தது. ஆனால் போகப் போக கொஞ்சம் தொய்வாக மாறியது. எனவே இது போன்ற ஆடுகளத்தின் மெதுவாக பந்து வீச வேண்டும் என்று நான் யாருக்கும் அழைப்பிதழ் வைத்து சொல்ல தேவையில்லை. போட்டியில் எங்கள் வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். ஆரம்பித்திலும் இறுதியிலும் நல்ல முறையில் விளையாடினார்கள். பந்துவீச்சிலும் எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் தங்களது பணியை செய்ததால் தான் இன்று எங்களுக்கு வெற்றி கொஞ்சம் எளிதாக கட்டியது.

Story first published: Wednesday, January 28, 2026, 23:50 [IST]
Other articles published on Jan 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+