Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: நியூசிலாந்து அணி அபார வெற்றி.. இந்திய மண்ணில் புதிய சாதனை.. EX சிஎஸ்கே வீரர் அதிரடி சதம்

ராஜ்கோட்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா 38 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இந்த இடத்தில் இரண்டாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் வில் யங் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அபாரமாக விளையாடிய கில் 53 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இன்று அரை சதம் அடித்திருந்தார்.

தொடர்ந்து ஆறாவது முறையாக 50 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார். ஆனால் கோலி 23 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ், எட்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி தடுமாறியபோது களத்திற்கு வந்த கேஎல் ராகுல் தனது வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினார்.

92 பந்துக்களை எதிர்கொண்ட அவர் 112 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பௌண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும். ஜடேஜா 27 ரன்களும், நிதிஷ்குமார் 20 ரன்களும் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீரர் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோலஸ் களமிறங்கினர்.

இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க நியூசிலாந்து அணி 46 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் மூன்றாவது விக்கெட் ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் டேரல் மிட்செல் ஆகியோர் இந்திய பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாற, மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 162 ரன்கள் சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய 87 ரன்கள் எடுக்க டாரல் மிட்செல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் நியூசிலாந்த அணி இந்த இலக்கை 47.3வது ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டியது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை சமன் செய்துள்ளனர். இந்திய பந்துவீச்சு தரப்பில் ஹர்சித் மற்றும் குல்திப் யாதவ், பிரசித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

Story first published: Wednesday, January 14, 2026, 21:35 [IST]
Other articles published on Jan 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+