Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: நியூசிலாந்து அணி உலக சாதனை.. முதல் ஓவரிலே 2 விக்கெட் இழந்த இந்தியா

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது டி20 போட்டியில் 260 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பெரும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்து பிரம்மாண்ட சாதனை படைத்தது. ஈடன் பார்க் மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டி20 ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Ind vs NZ

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய நியூசிலாந்து அணியில், கிளென் பிலிப்ஸ் இந்திய பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். அபாரமாக ஆடிய அவர் வெறும் 46 பந்துகளில் சதம் விளாசி, 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து அதிரடி காட்டிய மைக்கேல் பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணியின் ஸ்கோர் உயருவதற்குக் காரணமாக அமைந்தது.

IND vs NZ: 6,4,4 என பறக்கவிட்ட டேரல் மிட்செல்.. பழிவாங்கிய கம்பீர் சிஷ்யன்.. பவர்பிளேவில் அபாரம்

IND vs NZ: 6,4,4 என பறக்கவிட்ட டேரல் மிட்செல்.. பழிவாங்கிய கம்பீர் சிஷ்யன்.. பவர்பிளேவில் அபாரம்

இந்திய பந்துவீச்சில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஓரளவு கட்டுப்படுத்த முயன்றார். அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதில் நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், அர்ஷ்தீப் சிங் சர்வதேச டி20 போட்டிகளில் தனது 150-வது விக்கெட்டைப் பூர்த்தி செய்து புதிய மைல்கல்லை எட்டினார்.

IND vs NZ: புவனேஸ்வர் குமாரை நீக்கியது தவறு.. மீண்டும் கம்பேக் தருவார்- தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

Also Read

IND vs NZ: புவனேஸ்வர் குமாரை நீக்கியது தவறு.. மீண்டும் கம்பேக் தருவார்- தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

260 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட இந்திய அணிக்கு, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரிலேயே கடும் பின்னடைவு ஏற்பட்டது. ஓவரின் இரண்டாவது பந்திலேயே சஞ்சு சாம்சன் 4 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.முதல் ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

Story first published: Friday, October 30, 2026, 15:10 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+