Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ - இந்தியாவுக்கு எதிரான தொடர்.. நியூசிலாந்துக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய வீரர் இல்லை

மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. நியூசிலாந்து அணி கடந்த ஒன்றரை மாதமாக ஆசிய கண்டத்தில் சுற்றுப்பயணம் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முற்றிலும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோல்வியை தழுவியது.

ind vs nz cricket kane williamson

இதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி சொந்த மண்ணுக்கு சென்று தற்போது ஓய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து தற்போது இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் இந்திய தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுதி விலகி இருந்தார்.

தற்போது இந்திய தொடரில் நியூசிலாந்து முக்கிய வீரரான கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதேபோன்று நியூசிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மைக்கில் பிரேஸ்வெல் முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தான் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வில்லியம்சன் காயம் குறித்து பேசி உள்ள நியூஸிலாந்து அணியின் தேர்வு குழு உறுப்பினர் சாம் வெல்ஸ், வில்லியம்சன் முதல் டெஸ்டில் விளையாட மாட்டார்.

எனினும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் 10 நாட்கள் வில்லியம்சன் வீட்டில் இருந்து தன்னுடைய உடல் தகுதியை மீட்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு வில்லியம்சன் முழு உடல் தகுதியை எட்டி இருந்தால் அவர் இரண்டு அல்லது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வில்லியம்சுக்கு பதிலாக மார்க் சாப்மேன் என்ற வீரரை நியூசிலாந்து தேர்வு செய்திருக்கிறது. நியூசிலாந்து அணிக்காக மொத்தம் 78 வெள்ளை நிற பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து ஏ அணியில் மார்க் சாப்மேன் சதம் அடித்திருந்தார்.

இதில் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மீண்டும் நியூசிலாந்து ஏ அணிக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 92 மற்றும் 45 ரன்கள் பெங்களூர் மண்ணில் அடித்தார். நியூசிலாந்து தொடரில் இலங்கை சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் ரங்கனா ஹெராத் அந்த அணிக்கு ஆலோசகராக செயல்பட உள்ளார்.

நியூசிலாந்து அணி : டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளூன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, மாட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (2வது மற்றும் 3வது டெஸ்ட் மட்டும்), டிம் சவுத்தி, கேன் வில்லியம்சன், வில் யங்

Story first published: Wednesday, October 9, 2024, 16:24 [IST]
Other articles published on Oct 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+