Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

26 போட்டிகளில் 1 வெற்றி.. நம்ப முடியாத வெற்றியை நோக்கி இந்தியா அதிரடி ஆட்டம்.. ஜெயிக்க வாய்ப்பு?

புனே: இந்திய அணிக்கு 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்து இருக்கிறது நியூசிலாந்து அணி. இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 300க்கும் மேற்பட்ட இலக்கை இதுவரை 26 முறை சேஸிங் செய்ய முயன்று இருக்கிறது. அதில் ஒரு முறை மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் 359 ரன்கள் இலக்கை நோக்கி ஆடும் இந்திய அணி கடுமையான சவாலை எதிர்கொண்டு இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்தியா 156 ரன்களும் எடுத்தன. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்கள் எடுத்தது.

ind vs nz india new zealand

இதன் மூலம், இந்திய அணிக்கு 359 ரன்கள் என்று வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன் 26 முறை இந்திய மண்ணில் இந்திய அணி 300 -க்கும் மேற்பட்ட இலக்கை துரத்தி இருக்கிறது. அதில் 2008இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

அந்தப் போட்டியில் 387 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி அதை எட்டி வெற்றி பெற்றது. மற்ற 25 போட்டிகளில் 300 -க்கும் மேற்பட்ட இலக்கை சேஸிங் செய்த போது அதில் 14 தோல்விகள், ஒரு டை மற்றும் 9 டிரா செய்து இருக்கிறது இந்திய அணி.

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு அணி சேஸிங் செய்த அதிகபட்ச இலக்கு 345 மட்டுமே. 1969 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆக்லாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றிருந்தது. இதை வைத்து பார்க்கும் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எட்டி வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று என தெரிய வருகிறது.

மேலும், இந்திய மண்ணில் 300க்கும் அதிகமான ரன்களை சேஸிங் செய்து வெல்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்பதும் தெரிகிறது. இந்த நிலையில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து இந்த சேஸிங்கை வெற்றிகரமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறது,

முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து 10 ரன்களை எடுத்தார். அதிரடியாக ஆட முயன்ற ரோஹித் சர்மா 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார். அதன் பின்னும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 10 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்து இருக்கிறது. சுப்மன் கில், ஜெய்ஸ்வால் களத்தில் இருக்கும் நிலையில், ஒன்பது விக்கெட்களை வைத்துக் கொண்டு இந்திய அணி எப்படி இந்த போட்டியில் சேஸிங் செய்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Story first published: Saturday, October 26, 2024, 12:00 [IST]
Other articles published on Oct 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+