Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: 3 இந்திய வீரர்கள் அதிரடி நீக்கம்.. கேப்டன் ரோஹித் போட்ட போடு.. பிளேயிங் 11 இதுதான்!

புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று வீரர்களை அணியில் இருந்து நீக்கி அதிரடி காட்டி இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் கே எல் ராகுல் ஆகிய மூவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர்.

அவர்களுக்கு பதிலாக ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சுப்மன் கில் அணியில் இணைந்து உள்ளனர். கே எல் ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டியிலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற வியூகத்துடன் அணித் தேர்வை செய்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி (பிளேயிங் 11):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா

இந்திய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணி (பிளேயிங் 11):

டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓ'ரூர்க்

ind vs nz india new zealand

அவர்களுக்கு பதிலாக ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சுப்மன் கில் அணியில் இணைந்து உள்ளனர். கே எல் ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டியிலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற வியூகத்துடன் அணித் தேர்வை செய்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.

முதல் டெஸ்ட் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாத கே எல் ராகுல் நீக்கப்பட்டு அணிக்கு திரும்பி இருக்கும் சுப்மன் கில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். சுப்மன் கில் இல்லாததால் முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்ற சர்ஃபராஸ் கான் சதம் அடித்ததால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது இடத்தை தக்க வைத்து இருக்கிறார்.

குல்தீப் யாதவ் பேட்டிங்கில் கை கொடுக்க மாட்டார் என்பதாலும், முதல் டெஸ்ட் போட்டியில் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததாலும் இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்டு இருக்கிறார். சமீபத்தில் ரஞ்சி தொடரில் சதம் அடித்த சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

நியூசிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

Story first published: Thursday, October 24, 2024, 9:26 [IST]
Other articles published on Oct 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+