Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்!

Recommended Video

IND VS NZ TEST SERIES 2020 | Prithvi Shaw likely to play in test series

வெல்லிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் துவக்க வீரராக இளம் வீரரை களம் இறக்க உள்ளார் கேப்டன் கோலி.

ரோஹித் சர்மா காயத்தால் விலகி உள்ள நிலையில், அவரது இடத்தில் ப்ரித்வி ஷா களமிறங்க உள்ளார்.

ஷுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறிய நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார் கோலி.

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பெரிய வெற்றியையும், பெரிய தோல்வியையும் சந்தித்துள்ளது. டி20 தொடரில் வைட்வாஷ் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் வைட்வாஷ் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

ரோஹித் காயம்

ரோஹித் காயம்

இந்த சுற்றுப்பயணத்தில், இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக அமைந்தது ரோஹித் சர்மாவின் காயம் தான். டி20 தொடரில் ஆடிய ரோஹித், ஒருநாள் தொடரில் காயம் காரணமாக விலகினார். இந்திய அணி ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைய, ரோஹித் இல்லாததும் முக்கிய காரணம்.

இருவரில் யார்?

இருவரில் யார்?

இந்த நிலையில், டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா காயம் காரணமாக பங்கேற்க முடியாத நிலை இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு பதிலாக துவக்கம் அளித்த ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் இடையே கடும் போட்டி இருந்தது.

ஷுப்மன் கில் ஏமாற்றம்

ஷுப்மன் கில் ஏமாற்றம்

இந்தியா ஏ அணிக்காக ஆடிய போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்த ஷுப்மன் கில், பயிற்சிப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் டக் அவுட் மற்றும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பை வீணடித்தார்.

கோலி முடிவு என்ன?

கோலி முடிவு என்ன?

இந்த நிலையில், பயிற்சிப் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் டக் அவுட் ஆனாலும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 39 ரன்கள் எடுத்த ப்ரித்வி ஷாவை டெஸ்ட் அணியில் துவக்க வீரராக ஆட வைக்க முடிவு செய்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

தனி வழியில் ஆடும் ப்ரித்வி ஷா

தனி வழியில் ஆடும் ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷாவைப் பொறுத்தவரை அவர் தனித்துவமான வீரராக இருக்கிறார். தன் பாணியில் பவுண்டரி அடித்து ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சிலர் இவரது பேட்டிங் ஸ்டைலை முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவாக் உடன் ஒப்பிட்டு பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடரில் என்ன செய்தார்?

ஒருநாள் தொடரில் என்ன செய்தார்?

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ப்ரித்வி ஷா தன் பாணியில் தான் ஆடினார். மூன்று போட்டிகளில் அவர் 20, 24, 40 என குறைந்த ரன்களே எடுத்தாலும், தான் பேட்டிங் ஸ்டைலை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. அதிலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் எடுத்த 24 ரன்களும், ஃபோர் மூலம் கிடைத்தது.

நீண்ட காலம்

நீண்ட காலம்

ப்ரித்வி ஷா ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். 2018 அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். அந்த தொடரில் இரு போட்டிகளில் ஆடிய அவர் தன் முதல் போட்டியின், முதல் இன்னிங்க்ஸில் சதம் அடித்தார்.

காரணம்

காரணம்

ஷுப்மன் கில்-ஐ தாண்டி அணியில் ப்ரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்க அவர் ஏற்கனவே அறிமுகம் ஆகி சிறப்பாக ரன் குவித்ததும் ஒரு முக்கிய காரணம். நியூசிலாந்து மண்ணில் முன்பு சேவாக் அதிரடி ஆட்டம் ஆடி தெறிக்கவிட்டுள்ளார். அதே போல, ப்ரித்வி ஷாவும் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால்

இந்திய அணியில் மற்றொரு துவக்க வீரராக மயங்க் அகர்வால் ஆட உள்ளார். அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி அபார ஆட்டம் ஆடியவர். இவர் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் தடுமாறினாலும், டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

Story first published: Wednesday, February 19, 2020, 21:21 [IST]
Other articles published on Feb 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+