Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- நியூசிலாந்துக்கு எதிராக 5 சாதனைகளை படைக்க போகும் தமிழக வீரர் அஸ்வின்

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 16ஆம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்குகிறது. இந்த தொடரில் தமிழகத்திற்கு அஸ்வின் ஐந்து சாதனைகளை படைக்க வாய்ப்பு இருக்கிறது. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் அஸ்வின் இருக்கிறார்.

அஸ்வின் தற்போது 527 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் அஸ்வின் கும்ப்ளேவின் ரெக்கார்டை உடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

ind vs nz r ashwin virat kohli


இந்த சூழலில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் ஐந்து சாதனைகளை படைக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அணில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிப்பார். இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அஸ்வின் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை அஸ்வினை சேரும்.

இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வார்னேவின் சாதனையை அஸ்வின் முறியடித்து, இரண்டாவது இடத்தை பிடித்திருப்பார்.

இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நாதன் லயானை பின்னுக்கு தள்ளி அஸ்வின் ஏழாவது இடத்தை பிடிப்பார்.

Story first published: Monday, October 14, 2024, 23:11 [IST]
Other articles published on Oct 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+