Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: சூர்யகுமார் முதுகில் இருந்த குரங்கு இறங்கி விட்டது.. அஸ்வின் கருத்து

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த 32 ரன்களை முவெகுவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டினார். அபிஷேக் ஷர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

சமீபகாலமாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், கடந்த 21 போட்டிகளில் வெறும் 13 என்ற ரன் சராசரியுடன் இருந்தார். இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 22 பந்துகளில் அவர் அடித்த 32 ரன்கள், "அவர் மீதிருந்த சுமையைப் போக்கியது" என அஷ்வின் குறிப்பிட்டார். ந்த இன்னிங்சில் சூர்யகுமார், நான்கு பவுண்டரிகளைடன் ஒரு சிக்ஸர் விளாசினார் என்றும் அஷ்வின் பாராட்டினார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் ஷர்மாவின் அதிரடி 84 ரன்கள் (35 பந்துகள்) மற்றும் ரிங்கு சிங்கின் அபார 44 ரன்கள் (20 பந்துகளில் 44*) உதவியுடன் 238/7 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. பின்னர், 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, க்ளென் பிலிப்ஸ் (39 பந்துகளில் 78 ரன்கள்) மற்றும் மார்க் சாப்மேன் (24 பந்துகளில் 39 ரன்கள்) ஆகியோரின் அச்சுறுத்தும் ஆட்டத்தால் ஓரளவிற்கு நெருக்கடி கொடுத்தது.

இருப்பினும், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, நியூசிலாந்து அணியை 190/7 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இதன் மூலம், இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்து, தனது தொடர்ச்சியான வெற்றிகளை நீட்டித்தது.

இது குறித்து பேசிய அஸ்வின், " சூர்யகுமார் முதுகின் மீது இருந்த குரங்கு இறங்கியது. சூர்யகுமாரின் பேட்டிங் மற்றும் அவரது ஃபார்ம் குறித்து பலர் பேசிக் கொண்டிருந்தனர். டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒரே மாதிரி செயல்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர் ரன்கள் எடுத்தது எனக்குப் பிடித்திருந்தது. அவர் இன்று நல்ல ஃபார்மில் காணப்பட்டார். ஒரு பேட்டர் ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தால், அரை சதம் எடுக்க நினைப்பார்.

ஆனால் சூர்யா அப்படி செய்யவில்லை. இந்த அணிக்கு ஒரு கொள்கை உண்டு, அவர்கள் தொடர்ந்து ரன்கள் குவித்து, அடித்து ஆடவே விரும்புவார்கள். அவர் தன் இயல்புடன் காணப்பட்டார். அவர் சிறப்பாகத் தெரிந்தார், இது அவருக்கு ஒரு பெரிய பாசிட்டிவ் தான் என்று அஸ்வின் பாராட்டினார். இது சூர்யகுமார் தனது கடந்த 20 இன்னிங்ஸ்களில் 30 ரன்களைக் கடந்த மூன்றாவது முறை மட்டுமே ஆகும்.

இந்தியா இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு கொண்டு செல்லவிருக்கும் அணி இதுதான் என்று அஷ்வின் நெம்பிக்கை தெரிவித்தார். அர்ஷ்தீப் சிங்கை ஹர்ஷித் ரானாவுடன் சுழற்சி முறையில் பயன்படுத்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். அர்ஷ்தீப் ஒரு "முக்கியமான பந்துவீச்சாளர், அவரை அணியில் இருந்து நீக்கக்கூடாது" என அஷ்வின் குறிப்பிட்டார்.

ஷிவம் துபேயின் பந்துவீச்சு குறித்து பேசிய அஷ்வின், "ஷிவம் துபேயின் பந்துவீச்சு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து ஒரு பந்துவீச்சாளரை அணியில் கொண்டு வருவது பற்றி நிச்சயமாக ஒரு கலந்துரையாடல் நடக்கும். இன்று அவர் மூன்று ஓவர்கள் வீசினார். எனவே, அவரது பந்துவீச்சுக்கு அவர்கள் ஆதரவளிக்கிறார்கள், அவரது பந்துவீச்சு குறித்து பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று நினைக்கிறேன். இதுவே சரியான காம்பினேஷனாக இருக்கும்."

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவின் செயல்பாடு குறித்தும் அஷ்வின் கருத்து தெரிவித்தார். அந்தத் தொடரில் அவர் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார், சராசரி 60-க்கு மேலும், எக்கனாமி ரேட் 7.28 ஆகவும் இருந்தது. முதல் டி20 போட்டியில் அவர் இடம்பெறாதது, "சிந்திக்க ஓர் இடைவெளி" என்று அஷ்வின் கூறினார்.

"நான் குல்தீப்பின் பெரிய ரசிகன். டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியாக பலமாக இருக்க வேண்டும், பலத்தை வேறு எங்காவது கையாள வேண்டும். உங்களிடம் ஜஸ்பிரித் பும்ரா அல்லது வேறு யாரேனும் இல்லையென்றால், பேட்டிங் வலிமையை சற்று ஆழப்படுத்த வேண்டும். ஆனால் இந்த அணியில், பவர்பிளேயில் உங்களுக்கு ரன்கள் கிடைக்கின்றன, ஹர்திக் அடிக்கிறார், உங்களிடம் ஏழு பந்துவீச்சாளர்கள் உள்ளன. நான் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் ஆகியோரை விளையாட விரும்புகிறேன். ஆனால் இன்று போல் இருந்தால், அது முற்றிலும் சரியானது." என்று அஸ்வின் கூறினார்.

Story first published: Thursday, January 22, 2026, 18:39 [IST]
Other articles published on Jan 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+