Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திட்டம் போட்டு தூக்கிய ஜடேஜா - கோலி.. 2 முறையும் வசமாக சிக்கிய நியூசி. வீரர்!

Recommended Video

IND vs NZ 2nd T20|டி கிராண்ட்ஹோம்-யை வெச்சி செய்த ஜடேஜா |

ஆக்லாந்து : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ஜடேஜா சிறப்பாக பந்து வீசி அசத்தினார்.

அவர் நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோம் விக்கெட்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக வீழ்த்தி இந்த தொடரில் அசத்தி இருக்கிறார்.

இந்த இரண்டு முறையும் கேப்டன் விராட் கோலி, ஜடேஜா இருவரும் திட்டமிட்டே கிராண்ட்ஹோம் விக்கெட்டை விரைவாக வீழ்த்தி உள்ளனர்.

டக் அவுட் ஆனார்

டக் அவுட் ஆனார்

இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் கோலின் டி கிராண்ட்ஹோம் ஜடேஜாவின் சுழற் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி இருந்தார். இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் கோலின் டி கிராண்ட்ஹோம் ஜடேஜாவின் சுழற் பந்து வீச்சில் டக் அவுட் ஆகி இருந்தார்.

முதல் பந்தில் அவுட்

முதல் பந்தில் அவுட்

அந்தப் போட்டியில் ஜடேஜா பந்துவீச்சில் முதல் பந்தை சந்தித்த உடன் கிராண்ட்ஹோம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா லெக் ஸ்டம்பை குறி வைத்து பந்தை வீசி இருந்தார். அதை சமாளித்து பந்தை அடித்த கிராண்ட்ஹோம், அப்போது சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஜடேஜாவை அழைத்தார்

ஜடேஜாவை அழைத்தார்

இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்தார் கிராண்ட்ஹோம் சிவம் துபே மற்றும் பும்ரா ஓவர்களில் சில பந்துகளை சந்தித்தார். அவரது விக்கெட்டை விரைவாக வீழ்த்த திட்டமிட்ட கேப்டன் கோலி, ஜடேஜாவை பந்து வீச அழைத்தார்.

கேட்ச் கொடுத்தார்

கேட்ச் கொடுத்தார்

ஜடேஜாவின் பந்துவீச்சில் முதல் பந்தை சந்தித்த கிராண்ட்ஹோம் பந்தை கணிக்க முடியாமல் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஜடேஜா, கேப்டன் கோலியை பார்த்து வெற்றிப் புன்னகை செய்தார். மீண்டும் கிராண்ட்ஹோம் தன் வலையில் வீழ்ந்ததை சுட்டிக் காட்டினார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 17.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. ஜடேஜா, பும்ரா பந்துவீச்சில் அசத்த, ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெறச் செய்தனர்.

Story first published: Sunday, January 26, 2020, 20:28 [IST]
Other articles published on Jan 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+