Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: பேட்டிங் மட்டுமல்ல, ஃபில்டிங்கிலும் கில்லி தான்.. ரிங்கு சிங் படைத்த சாதனை

விசாகப்பட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ரிங்கு சிங் சாதனை ஒன்றை படைத்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பேட்டிங்கில் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த அவர், ஃபிஙலடிங்கில் அவர் நான்கு கேட்சுகளைப் பிடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக, 2014 செப்டம்பர் 7 அன்று பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அஜிங்க்யா ரஹானே நான்கு கேட்சுகளைப் பிடித்திருந்தார்.

தற்போது அவரது சாதனையை ரிங்கு சிங் சமன் செய்துள்ளார். இந்தியாவின் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த வீரர்கள் பட்டியலில், ரஹானேவுடன் ரிங்கு சிங்கும் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

ரிங்கு சிங்கின் இந்த நான்கு கேட்சுகளில், நியூசிலாந்து இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் டெவான் கான்வே (23 பந்துகளில் 44 ரன்கள்) கொடுத்த கேட்ச் முதலாவதாகும். இதையடுத்து, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் டிம் சைஃபர்ட் (36 பந்துகளில் 62 ரன்கள்) அடித்த பந்தையும் அவர் துல்லியமாகப் பிடித்தார்.

மேலும், பதினான்காவது ஓவரின் நான்காவது பந்தில் மீண்டும் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் கிளென் பிலிப்ஸின் கேட்சையும், பிறகு பதினெட்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் சாக் ஃபாக்ஸின் கேட்சையும் ரிங்கு சிங் சிறப்பாகப் பிடித்தார். பந்துவீச்சாளர்கள் பந்துகளோடு கேட்சுகளும் கை கொடுத்தன.

ஒரு சர்வதேச டி20 போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய வீரர்களின் பட்டியல்: அஜிங்க்யா ரஹானே, 4 கேட்சுகள், இங்கிலாந்துக்கு எதிராக, பர்மிங்காம், செப்டம்பர் 7, 2014; ரிங்கு சிங், 4 கேட்சுகள், நியூசிலாந்துக்கு எதிராக, விசாகப்பட்டினம், ஜனவரி 28, 2026.

மூன்று கேட்சுகள் பிடித்தவர்கள்: ரோஹித் சர்மா (தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க், மார்ச் 30, 2012; மேற்கிந்தியத் தீவுகள், லக்னோ, நவம்பர் 6, 2018; நமீபியா, துபாய், நவம்பர் 8, 2021); சுரேஷ் ரெய்னா (தென்னாப்பிரிக்கா, கொழும்பு (RPS), அக்டோபர் 2, 2012; பாகிஸ்தான், மிர்பூர், மார்ச் 21, 2014; தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க், பிப்ரவரி 18, 2018); அஜிங்க்யா ரஹானே (இங்கிலாந்து, புனே, டிசம்பர் 20, 2012); விராட் கோலி (இங்கிலாந்து, பெங்களூரு, பிப்ரவரி 1, 2017); ருதுராஜ் கெய்க்வாட் (தென்னாப்பிரிக்கா, ராஜ்கோட், ஜூன் 17, 2022); தீபக் ஹூடா (மேற்கிந்தியத் தீவுகள், லாடரில், ஆகஸ்ட் 6, 2022).

தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங் (நியூசிலாந்து, மவுண்ட் மவுங்கானுய், நவம்பர் 20, 2022); சூர்யகுமார் யாதவ் (நியூசிலாந்து, அகமதாபாத், பிப்ரவரி 1, 2023); ஆர். சாய் கிஷோர் (நேபாளம், ஹாங்சோவ், அக்டோபர் 3, 2023); ரவீந்திர ஜடேஜா (ஆப்கானிஸ்தான், பிரிட்ஜ்டவுன், ஜூன் 20, 2024); ரிங்கு சிங் (ஜிம்பாப்வே, ஹராரே, ஜூலை 13, 2024); ஹர்திக் பாண்டியா (பங்களாதேஷ், டெல்லி, அக்டோபர் 9, 2024; நியூசிலாந்து, ராய்பூர், ஜனவரி 23, 2026); ரியான் பராக் (பங்களாதேஷ், ஹைதராபாத், அக்டோபர் 12, 2024) ஆகியோரும் தலா மூன்று கேட்சுகளைப் பிடித்துள்ளனர்.

டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிகபட்ச கேட்சுகள் எடுத்த உலக சாதனையை மாலத்தீவு வீரர் வெடகே மலிந்தா ஐந்து கேட்சுகளுடன் பிடித்துள்ளார். அவர் அக்டோபர் 5, 2023 அன்று தோஹாவில் கத்தாருக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இது உலகின் மிக உயர்ந்த பதிவு.இவரது சாதனையை, ஸ்வீடனின் செடிக் சஹாக் (ஐல் ஆஃப் மேன், டிரோமோட், செப்டம்பர் 6, 2025) மற்றும் பங்களாதேஷின் டான்சிட் ஹசன் (அயர்லாந்து, சட்டோகிராம், டிசம்பர் 2, 2025) ஆகியோர் தலா ஐந்து கேட்சுகளுடன் சமன் செய்துள்ளனர்.

Story first published: Thursday, January 29, 2026, 7:00 [IST]
Other articles published on Jan 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+