பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மூன்றாவது நாளில் ஆடுகளத்துக்கு வரவில்லை. அது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அவரால் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற விடை தெரியாத கேள்வியுடன் இருந்தனர். அவர் இரண்டாம் நாள் அன்று பேட்டிங் செய்ய வரவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி மட்டும் கிடைத்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்து இருந்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடி 402 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை அளித்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது நியூசிலாந்து.

இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன சோகம் ஒருபுறம் இருந்த நிலையில், ரிஷப் பண்ட் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முழங்காலில் காயத்தால் வெளியேறி இருந்தது ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் அவர் மீண்டும் பேட்டிங் ஆட முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது.
ஏனெனில், அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டு இருந்தது. அதே முழங்காலில் தான் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. அவர் கார் விபத்தில் சிக்கிய போது அந்த காலில் அவருக்கு பலத்த காயம் இருந்தது. அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு பின்னர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அளவுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு மீண்டு வந்து இருந்தார் பண்ட்.
அவரது வரவால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தான் ரிஷப் பண்ட்டுக்கு அதே முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றியது இந்திய அணி நிர்வாகம். மூன்றாவது நாள் அன்று நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த நிலையில் துருவ் ஜுரல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
ரிஷப் பண்ட் மூன்றாம் நாள் அன்று இந்தியா பந்து வீசிய போது களத்துக்கு வரவில்லை. அது பற்றி பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாவது நாள் அன்று ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என தெரிவித்து இருந்தது. அதனால், அவர் பேட்டிங் செய்யவும் முடியாதா? என ரசிகர்கள் கேள்வியுடன் காத்திருந்தனர்.
பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனினும், அவர் ஆடுகளத்திம் ஒரு பகுதியில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இதன் மூலம் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுத்து 3 விக்கெட்களை இழந்து உள்ளது.