Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகத்துல எங்க ஆடினாலும் இந்தியா டஃப் கொடுக்கும்.. உலகக்கோப்பையும் நமக்கு தான்.. சச்சின் புகழாரம்!

Recommended Video

எங்க ஆடினாலும் இந்தியா சவாலாக இருக்கும் : சச்சின் புகழாரம்!- வீடியோ

மும்பை : இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியது.

இங்கிலாந்து தவிர்த்து இந்தியா தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஒருநாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறது. அதை தொடர்ந்து சச்சின் இந்திய அணியை புகழ்ந்து கருத்து கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் வெற்றி

வெளிநாடுகளில் வெற்றி

முன்னதாக இந்தியா தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றி இருந்தது. நியூசிலாந்து நாட்டிலும் தற்போது ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இங்கிலாந்தில் மட்டுமே இந்தியா தடுமாறியது.

கடும் போட்டி அளிக்கும் அணி

கடும் போட்டி அளிக்கும் அணி

இந்நிலையில் சச்சின் இந்திய அணியின் வெற்றிப் பாதை குறித்து பேசும் போது, இந்திய அணி தற்போது சரியான சமபலம் பெற்றுள்ளது. உலகின் எந்த இடத்திலும், எந்த களத்திலும் இந்தியா கடும் போட்டி அளிக்கும் அணியாக இருக்கும் என கூறினார்.

உலகக்கோப்பையை யார் வெல்வார்?

உலகக்கோப்பையை யார் வெல்வார்?

மேலும், உலகக்கோப்பையில் இந்திய அணி தான் கோப்பை வெல்லும் அணியாக இருக்கும் என கூறினார். அதே சமயம், உலகக்கோப்பையில் கடும் போட்டி போடும் அணிகளாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இருக்கும் என கூறினார் சச்சின்.

ஆஸ்திரேலியா என்ன செய்யும்?

ஆஸ்திரேலியா என்ன செய்யும்?

அதே போல, ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் வலுவான பந்துவீச்சாளர்கள் இடம் பெறும் நிலையில் அந்த அணியின் ஆபத்தான அணியாக இருக்கும் என கூறினார் சச்சின்.

Story first published: Sunday, February 3, 2019, 18:39 [IST]
Other articles published on Feb 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+