Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்திய அணிக்கு ஆரம்பமே சோகம்.. அதிரடி ஆசைப்பட்டு 2 முக்கிய வீரர்கள் அவுட்.. சாம்சன் ஏமாற்றம்

நாக்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சாம்சன் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதிரடியாக விளையாட முற்பட்டு தனது விக்கெட்டை பறி கொடுத்தார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களை உள்ள நிலையில் அதற்கு முன்பு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

தொடக்க வீரராக களம் இறங்கி வந்த சஞ்சு சாம்சன் தன்னுடைய இடத்தை கடந்த ஆண்டு சுப்மன் கில்லிடம் இழந்தார். எனினும் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் சாம்சனுக்கு தொடக்க வீரராக இடம் கிடைக்க கில் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

Ind vs NZ

இந்த நிலையில் கூடுதல் விக்கெட் கீப்பராக இசான் கிஷனும் அணியில் இருக்கின்றார். இதன் காரணமாக சஞ்சு சாம்சன் இடம் இன்னும் உறுதியாக வில்லை. இந்த நிலையில் நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் இரண்டாவதாக பந்து வீசும் போது கடுமையாக தடுமாறலாம். இதனால் பெரிய அளவு ரன்கள் குவித்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும் என்ற நோக்கில் இந்தியா ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்டியது.

நியூசிலாந்து அணியும் சில பந்துகளை அபாரமாக வீசியது. எனினும் அதற்கு கவுண்டர் அட்டாக்கிங் செய்த அபிஷேக் ஷர்மா சிக்ஸர் அடித்து தனது கணக்கை தொடங்கினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் தனது அதிரடியை காட்ட முற்பட்டார். இரண்டு பவுண்டரிகளை அடித்த நிலையில் தொடர்ந்து அதிரடி காட்ட முயன்ற போது ரச்சின் ரவீந்திரவிடம் சிக்கினார்.

இதன் மூலம் 7 பந்துகளில் சாம்சன் 10 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இது சஞ்சு சாம்சனின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக மிஞ்சியது. மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷனும் ஐந்து பந்துகளை எதிர் கொண்டு இரண்டு பவுண்டரிகள் சேர்த்து எட்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி பவர்பிளேக்குள் 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து இருக்கின்றது.

Story first published: Wednesday, January 21, 2026, 19:32 [IST]
Other articles published on Jan 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+