Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: "என் வழி தனி வழி".. வாசிங்டன் சுந்தர் கேட்ட கேள்விக்கு ரஜினி வசனத்தை சொன்ன சஞ்சு சாம்சன்

அகமதாபாத்: டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர், இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தான் இந்தியா வாழ்வா? சாவா? என்ற சூழலில் சூப்பர் 8 சுற்றில் சிக்கிய நிலையில் சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 97 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 89 ரன்கள் குவித்தார். மீண்டும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சன் 89 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த தொடரில் மொத்தமாக அவர் 321 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்து முதல் இடத்தை பிடித்திருக்கின்றார். சஞ்சு சாம்சன் 321 ரன்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோலி 2014 ஆம் ஆண்டு 319 ரன்கள் எடுத்திருந்தார்.

சஞ்சு சாம்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு அணி வீரர்கள் பேருந்தில் ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் இடம் அது எப்படி தல முக்கியமான போட்டிகளில் எல்லாம் 50 ரன்கள் அடித்திருக்கிறீர்கள், உங்களால் எப்படி முடிந்தது என்று கேள்வி கேட்டார்.

அதற்கு சற்றும் யோசிக்காத சஞ்சு சாம்சன், நம்ம வழி எப்போதுமே தனி வழி என்று ரஜினியின் வசனத்தை கூறியிருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும், தீவிர ரஜினி வெறியர். ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் 100 முறை பார்க்கும் பழக்கம் உடையவர்.

அணி விமானத்தில் எங்கேயாவது சென்றால் அப்போது அவர் ரஜினி படத்தை தான் பார்ப்பாராம். இதை கேள்விப்பட்ட ரஜினி, சஞ்சு சாம்சனை நேரில் அழைத்து பாராட்டியும் புகைப்படத்தும் எடுத்துக் கொண்டார். நாக் அவுட் போட்டிகளில் கடும் நெருக்கடி ஏற்படுவதால் பல வீரர்கள் தடுமாறும் நிலையில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடிருக்கிறார். இதனால்உண்மையிலேயே சஞ்சு சாம்சன் வழி தனி வழி தான்.

Story first published: Monday, March 9, 2026, 12:35 [IST]
Other articles published on Mar 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+