Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: "இவருக்கா வக்காலத்து வாங்குனீங்க?".. இனி டீமில் இடமில்லை.. சஞ்சு சாம்சன் மோசமான ஆட்டம்

விசாகப்பட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, துவக்க வீரர் சஞ்சு சாம்சன் மீதான விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளன. சுப்மன் கில்லுக்கு மாற்றாகக் மீண்டும் களமிறக்கப்பட்ட சஞ்சு சாம்சன், தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவது ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய டி20 அணியில் சுப்மன் கில் நிதானமாக விளையாடுகிறார் என்றும், அவருக்குப் பதிலாக அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனை மீண்டும் துவக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது.

IND vs NZ Sanju Samson vs Shubman Gill Fans Outraged After Samson Fails Again in IND vs NZ 4th T20

அதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மேலும், சஞ்சு சாம்சனுக்குத் துவக்க வீரராக ஆடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், "இவருக்கா இவ்வளவு நாள் வக்காலத்து வாங்கினோம்?" என்று ரசிகர்களே தலையில் கைவைக்கும் அளவிற்கு சஞ்சு சாம்சனின் சமீபத்திய ஆட்டம் அமைந்துள்ளது.
புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

சர்வதேச டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாடிய கடைசி 15 இன்னிங்ஸ்களைப் பார்த்தாலே அவரது மோசமான ஃபார்ம் வெட்டவெளிச்சமாகிறது.

கடைசி 15 இன்னிங்ஸ் ரன்கள்: 26, 5, 3, 1, 16, 56, 13, 39, 24, 2, 37, 10, 6, 0, 24.
மொத்த ரன்கள்: 262
சராசரி: 17.46
ஸ்ட்ரைக் ரேட்: 129.06

ஒரு துவக்க வீரரின் சராசரி வெறும் 17 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 130க்கும் குறைவாகவும் இருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவாகும். குறிப்பாக அயர்லாந்துக்கு எதிராக அடித்த அந்த ஒரே ஒரு அரைசதத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அவரது நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

சுப்மன் கில்லே பரவாயில்லை

நான்காவது போட்டியில் 216 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடியபோது, சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பவுண்டரிகள் அடித்தாலும், அவரால் களத்தில் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

சுப்மன் கில் மீது அதிரடி இல்லை என்ற விமர்சனம் இருந்தாலும், அவர் குறைந்தபட்சம் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடுவார். ஆனால் சஞ்சு சாம்சன் அதிரடியாகவும் ஆடாமல், நிலைத்து நிற்கவும் முடியாமல் விக்கெட்டைப் பறிகொடுத்து வருகிறார்.

சோலி முடிந்தது?

2026 டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில், சஞ்சு சாம்சன் தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைத் வீணடித்துவிட்டார் என்றே தெரிகிறது. இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் வரிசையாகக் காத்திருக்கும் நிலையில், சஞ்சு சாம்சனின் இந்திய அணி வாய்ப்பு ஊசலாட்டத்தை சந்தித்து வருகிறது.

Story first published: Thursday, January 29, 2026, 8:05 [IST]
Other articles published on Jan 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+