Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- சர்பிராஸ் கான் தொடர்பாக கம்பீர்,ரோகித் இடையே மோதல்!வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய கேப்டன்

புனே : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் வில் தற்போது தொடங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்தின் கேப்டன் டாம் லாத்தம், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்த போட்டியில் ரசிகர்கள் அனைவரும் மத்தியிலும் எழுந்த கேள்வி ஒன்றுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. இந்திய அணியில் பெங்களூரு டெஸ்டில் அபாரமாக விளையாடிய சர்பராஸ்கானுக்கு இடம் கிடைக்குமா இல்லை. தொடர்ந்து சொதப்பி வரும் கே எல் ராகுலுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ind vs nz gautam gambhir kl rahul sarfaraz khan

ஆனால் நேற்று செய்தியாளரிடம் பேசிய பயிற்சியாளர் கம்பீர், கேஎல் ராகுலுக்கு தான் இந்திய அணி நிர்வாகம் துணை நிற்கும், அவர் சீனியர் வீரர். நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர்! சமூக வலைத்தளத்தில் வரும் கருத்துகளை வைத்து இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்ய முடியாது என்று திமிராக பேசி இருந்தார்.

ஆனால் கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் பிளேயிங் லெவனில் இருப்பதை விரும்பவில்லை. ஏனென்றால் இந்தப் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது, கே.எல் ராகுலை வைத்து ரிஸ்க் எடுக்க ரோகித் சர்மா விரும்பவில்லை. அது மட்டும் இல்லாமல் சர்பராஸ்கான் விளையாடிய 4,5 டெஸ்ட் போட்டிகளிலே மூன்று அரை சதம், ஒரு சதம் அடித்து இருப்பதால் அவருக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முடிவில் இருந்தார்.

ஆனால் இதற்கு கம்பீர் ஒத்து வரவில்லை. இதனை அடுத்து கேப்டன் என்ற முறையில் தனது வீட்டோ பவரை பயன்படுத்தி சர்பராஸ் கானை அணிக்கு கொண்டு வந்திருக்கிறார் ரோகித் சர்மா. எப்போதும் அணி தேர்வில் பயிற்சியாளர், கேப்டனுக்கு அறிவுரை தான் வழங்க முடியும். இறுதி முடிவை கேப்டன் தான் எடுப்பார். ஆனால் கம்பீர் தாம் ரோகித் சர்மாவை விட சீனியர் என்ற பவரை காட்ட நினைத்தார்.

ஆனால் ரோகித் சர்மா அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. ரோகித் சர்மாவின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கம்பீர் சிராஜை பிளேயிங் லெவனின் சேர்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ஆனால் அவர் தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளாக இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காததால் அவரையும் ரோகித் சர்மா அதிரடியாக நீக்கி இருக்கிறார்.

Story first published: Thursday, October 24, 2024, 10:04 [IST]
Other articles published on Oct 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+