For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஷாட் ஆட வரலை.. 3 இன்னிங்ஸிலும் ஒரே மாதிரி அவுட்.. சர்ஃபராஸ் கானுக்கு சுட்டிக்காட்டிய கவாஸ்கர்!

புனே: இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் சர்ஃபராஸ் கான் கடைசி 3 இன்னிங்ஸிலும் ஒரே மாதிரியான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் சர்ஃபராஸ் கான் லாஃப்ட் ஷாட் விளையாட முயற்சிக்கும் போதெல்லாம் ஆட்டமிழந்திருப்பதால், அதனை சரியாக விளையாட பணியாற்ற வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. 103 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருப்பதால், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இதனிடையே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒரே மாதிரி ஷாட் விளையாடி ஆட்டமிழந்து வெளியேறி இருக்கின்றனர். மீண்டும் மீண்டும் பேட்ஸ்மேன்கள் அதே தவறை செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

ind vs nz sarfaraz khan mitchell santner

ரோஹித் சர்மா வழக்கம் போல் 3 மற்றும் 4 ஆகிய ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார். சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் இடதுகை ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்தப் பட்டியலில் இளம் நட்சத்திர வீரரான சர்ஃபராஸ் கானும் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை வெளுப்பதில் சர்ஃபராஸ் கான் முக்கியமான வீரர்.

கடந்த போட்டியிலேயே ஸ்பின்னர்களை ஸ்வீப் ஷாட்கள் மூலமாக அட்டாக் செய்து ஆச்சரியம் கொடுத்தார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் சர்ஃபராஸ் கான் இடதுகை ஸ்பின்னரான சான்ட்னரை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தை சந்தித்தார். முதல் ஓவரிலேயே ஸ்வீப் ஆடுவதற்கு தடுமாறிய அவர், நியூசிலாந்து வீரர்களின் குறைவான வேகத்தால் கணிக்க தவறினார்.

இதன்பின் கிளென் பிலிப்ஸை சரியாக கணித்து பவுண்டரி அடித்த நிலையில், சான்ட்னரையும் அட்டாக் செய்யும் மோடுக்கு வந்தார். ஆனால் சான்ட்னர் எப்போதும் பேட்ஸ்மேன்களை காக்க வைத்து பவுலிங் செய்யக் கூடியவர். அதாவது ரன் அப் எடுத்தாலும், கைகளில் இருந்து பந்தை வீசுவதற்கு முன் ஒரு நொடி நிறுத்தி பவுலிங் செய்வார். இந்திய அணியில் அஸ்வின் சில நேரங்களில் அப்படியான பந்துகளை வீசக் கூடியவர்.

அப்படி நிறுத்தி வீசும் போது பேட்ஸ்மேன்கள் என்ன ஷாட் விளையாடுகிறார்கள் என்பதை கணித்து தாமதமாக வீச முடியும். அதுபோல் சர்ஃபராஸ் கான் மிட் ஆஃப் தலைக்கு மேல் அடிக்க தயாரானதை கணித்து, கொஞ்சம் மித வேகத்தில் சான்ட்னர் வீசினார். சர்ஃபராஸ் கான் எந்த தயக்கமும் காட்டாமல் ஷாட்டிற்கு செல்ல, அது நேராக ஓரூர்க் கைகளில் சென்று விழுந்தது.

இதனால் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஒவ்வொரு முறையும் லாஃப்டட் ஷாட் விளையாட முயற்சித்து சர்ஃபராஸ் கான் ஆட்டமிழந்திருப்பது தொடர் கதையாகி வருகிறது. பெங்களூர் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சர்ஃபராஸ் கான் பந்தை லாஃப் செய்ய முயற்சித்து தான் ஆட்டமிழந்தார்.

ஃபீல்டர்களின் தலைக்கு மேல் அடிக்கும் போது, சில விஷயங்களை சர்ஃபராஸ் கான் தவற விடுவதாக பார்க்கப்படுகிறது. இதனை வர்ணனை செய்யும் போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சுட்டிக் காட்டினார். சர்ஃபராஸ் கான் அந்த ஷாட்டை சரியாக விளையாட தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, October 25, 2024, 12:09 [IST]
Other articles published on Oct 25, 2024
English summary
IND vs NZ: Sarfaraz Khan got out continuously by playing the lofted shot for the 3rd time in 2 Matches against New Zealand at Pune - அந்த ஷாட் ஆட வரலை.. 3 இன்னிங்ஸிலும் ஒரே மாதிரி அவுட்.. சர்ஃபராஸ் கானுக்கு சுட்டிக்காட்டிய கவாஸ்கர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+