Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ - Sarfaraz khan மகத்தான சாதனை.. சச்சின், கவாஸ்கர் பட்டியலில் இணைந்து அபாரம்

பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நியூசிலாந்தை முந்தும் நிலைக்கு சென்று இருக்கிறது.

பெங்களூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 46 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 42 ரன்கள் குவித்தது.

ind vs nz sarfaraz khan rishabh pant

இதன் மூலம் 366 ரன்கள் என்ற நிலையில் பின்தங்கி இருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் விதமாக இந்தியா போராடியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி ரன்கனை சேர்த்து வந்தனர்.

ரோகித் சர்மா 52 ரன்கள், விராட் கோலி 70 ரன்கள் ஜெய்ஸ்வால் 35 ரன்கள் என ஆட்டம் இழக்க தற்போது நான்காவது விக்கெட்டுக்கு சர்பராஸ்கான் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது .
குறிப்பாக சர்பராஸ்கான் 110 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 13 பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் அடங்கும்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்பராஸ்கான் ஒரு சாதனையை படைத்திருக்கிறார். அதாவது முதல் இன்னிங்சில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு கிடைத்திருக்கிறது.
இந்தப் பட்டியலில் இணைந்த ஒன்பதாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பாக கவாஸ்கர்,சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ,அசாருதீன்,திலீப் வெங்சர்கார், ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள். தற்போது சர்பாஸ்கான் அபாரமாக விளையாடி வருவதால் மூன்றாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவாரா இல்லை நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் சர்பராஸ்கான் இரட்டை சதம் அடித்து விட்டால் அவருடைய இடம் அவருக்கு உறுதியாகிவிடும்.

Story first published: Saturday, October 19, 2024, 12:34 [IST]
Other articles published on Oct 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+