Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடியலை தம்பி.. இத்தோட நிறுத்திக்குவோம்.. இளம் வீரருக்கு இனி நோ சான்ஸ்.. கேப்டன் கோலி அதிரடி!

ஹாமில்டன் : இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.

ஷர்துல் தாக்குர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை வாரி இறைத்துள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியிலும் தாக்குர் ரன்களை வாரிக் கொடுத்தார். அதனால், அவர் இரண்டாவது போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

புவனேஸ்வர் குமார் காயம்

புவனேஸ்வர் குமார் காயம்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அணியில் மாற்று வேகப் பந்துவீச்சாளராக வாய்ப்பு பெற்றார் ஷர்துல் தாக்குர். அவரது செயல்பாடுகள் சில போட்டிகளில் சிறப்பாக இருந்தது.

ஷர்துல் தாக்குர் வாய்ப்பு

ஷர்துல் தாக்குர் வாய்ப்பு

அதைத் தொடர்ந்து ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் பும்ரா, ஷமிக்கு அடுத்து மூன்றாவது பந்துவீச்சாளராக வாய்ப்பு பெற்று வருகிறார். ஆஸ்திரேலிய தொடர், இலங்கை தொடரை தொடர்ந்து நியூசிலாந்து தொடரிலும் தாக்குருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

டி20 போட்டிகள்

டி20 போட்டிகள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஷர்துல் தாக்குர் சில தருணங்களில் சிறப்பாக செயல்பட்டார். விக்கெட் எடுத்து அணிக்கு உதவினார். ஆனால், ரன்களை வாரி இறைத்து வந்தார். எனினும், அவர் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் கோலி, அவரை ஒருநாள் போட்டிகளிலும் ஆட வைத்தார்.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டியில் அவர் 9 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்தார். அதாவது ஒரு ஓவருக்கு 8.89 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 10 ஓவர்களுக்கும் குறைவாக பந்து வீசி 80 ரன்களுக்கும் அதிகமாக கொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை செய்தார்.

எகானமி அதிகம்

எகானமி அதிகம்

50 ஓவர்களுக்கும் அதிகமாக பந்து வீசிய பந்துவீச்சாளர்களில் மிக அதிக அளவு எகானமி கொண்டவர்கள் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். 9 போட்டிகளில் ஆடி உள்ள அவர் ஓவருக்கு 6.81 ரன்கள் கொடுத்து இந்த மோசமான சாதனையை செய்துள்ளார் ஷர்துல் தாக்குர்.

இரண்டாவது போட்டி வாய்ப்பு

இரண்டாவது போட்டி வாய்ப்பு

இரண்டாம் ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்படுவார் என கணிக்கப்படுகிறது. சைனி அதிக வேகத்தில் பந்து வீசுவார் என்பதால் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே முன்னாள் வீரர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 7, 2020, 21:29 [IST]
Other articles published on Feb 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+