For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: தோல்வி அடைந்தாலும் நம்ப முடியாத ஆட்டம்.. மிரள வைத்த சிவம் துபே.. முக்கிய ரெக்கார்டுகள்

விசாகப்பட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், ஆல்-ரவுண்டர் சிவம் துபேவின் ஆட்டம் மட்டுமே இந்திய ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது. 216 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தடுமாறியபோது, தனி ஆளாகப் போராடிய அவர் நியூசிலாந்து பந்துவீச்சைச் சிதறடித்துப் பல்வேறு சாதனைகளைத் தகர்த்தெறிந்தார்.

216 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற மோசமான நிலையில் சிவம் துபே களமிறங்கினார்.

IND vs NZ Shivam Dube Fastest Fifty and Six-Hitting Record in 4th T20I vs New Zealand

வந்த வேகத்திலேயே அதிரடியைத் தொடங்கிய அவர், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். வெறும் 23 பந்துகளை மட்டுமே சந்தித்த சிவம் துபே, 3 பவுண்டரிகள் மற்றும் 7 இமாலய சிக்ஸர்களுடன் 65 ரன்கள் விளாசினார். துரதிர்ஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனது இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்தது.

ஒரே ஓவரில் 28 ரன்கள்

நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி வீசிய ஓவரில் சிவம் துபே காட்டிய அதிரடி மிரள வைத்தது. அந்த ஒரே ஓவரில் அவர் 28 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் டி20 போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் ரோஹித் சர்மாவுடன் (28 ரன்கள்) இணைந்தார். யுவராஜ் சிங் (36 ரன்கள்), சஞ்சு சாம்சன் (30 ரன்கள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனை அமைந்துள்ளது.

அதிவேக அரைசதம்

இந்தப் போட்டியில் சிவம் துபே வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். இதன் மூலம் இந்திய அணிக்காகத் டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அவர் பிடித்தார்.

யுவராஜ் சிங் - 12 பந்துகள் (2007)
அபிஷேக் சர்மா - 14 பந்துகள் (2026)
சிவம் துபே - 15 பந்துகள் (2026)
ஹர்திக் பாண்டியா - 16 பந்துகள் (2025)

ஸ்டிரைக் ரேட் சாதனை

50 ரன்களுக்கு மேல் குவித்த இன்னிங்ஸ்களில், அதிக ஸ்டிரைக் ரேட் வைத்திருந்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் துபே சாதனை படைத்துள்ளார்.

யுவராஜ் சிங் - 362.50 (எதிர் இங்கிலாந்து)
அபிஷேக் சர்மா - 340.00 (எதிர் நியூசிலாந்து)
சிவம் துபே - 282.60 (எதிர் நியூசிலாந்து)

சிவம் துபேவின் இந்த அதிரடி ஆட்டம் வீணானாலும், டி20 உலகக்கோப்பைக்கு முன்பு அவர் சிறந்த ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்குக் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, January 28, 2026, 23:14 [IST]
Other articles published on Jan 28, 2026
English summary
IND vs NZ: Shivam Dube Fastest Fifty and Six-Hitting Record in 4th T20I vs New Zealand. Shivam Dube smashed a 15-ball half-century and 7 massive sixes in the IND vs NZ 4th T20.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+