Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு - பண்ட் ஓரமா போங்க.. புதிதாக எண்ட்ரி தரும் ஸ்ரேயாஸ் ஐயர்.. அம்மாடியோ இப்படி ஒரு ரெக்கார்டா??

ஆக்லாந்து: இந்திய அணியில் மிடில் ஆர்டரில் யாருக்கு வாய்ப்பு என்ற சண்டை எழுந்து வரும் சூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, மிடில் ஓவர்களில் தடுமாறிய போதும், கடைசி நேரத்தில் காட்டிய அதிரடியால் 50 ஓவர்களில் 306/7 ரன்களை விளாசியது.

பண்ட் ஆ? சஞ்சு ஆ?

பண்ட் ஆ? சஞ்சு ஆ?

இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடமா? ரிஷப் பண்ட்-க்கு இடமா என்ற விவாதம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இடதுகை வீரர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக பண்ட் சேர்க்கப்பட்டு வருகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்த போது, இன்றைய போட்டியில் அவர்கள் இருவருமே வாய்ப்பை பெற்றனர். அதில் பண்ட் 15 ரன்களும், சஞ்சு சாம்சன் 37 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ஆனால் சஞ்சு சாம்சன் பார்ட்னர்ஷிப் கொடுப்பதற்காக நிதானமாக ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம்

ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம்

இந்நிலையில் இவர்கள் இருவரின் வாய்ப்பையும் பறிக்கும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் உருவெடுத்துள்ளார். இதற்கு காரனம் இன்றைய ஆட்டம் மட்டுமல்ல. நியூசியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 160 க்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தூண் போல நின்று 76 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். ஸ்ரேயாஸுக்கு வீக்னஸ் உள்ளது என கூறப்படும் போதும், அவரின் நிலையான ஆட்டம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபார ரெக்கார்ட்

அபார ரெக்கார்ட்

ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக விளையாடிய 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5வது 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்தை அடித்துள்ளார். அவரின் ஸ்கோர்கள் பின்வருமாறு 80(111), 54(57), 63(71), 44(34), 50(37), 113*(111), 28*(23), 80(76) என மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக இவரின் ஃபார்ம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஆடிய 4 இன்னிங்ஸ்களில் 3 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார்.

6 இடங்கள் நிரம்பியது

6 இடங்கள் நிரம்பியது

இந்தியாவின் மெயின் அணியில் ரோகித், கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகிய 5 பேரும் ஏற்கனவே இடத்தை உறுதி செய்துவிட்டனர். மீதமுள்ள ஒரு இடத்திற்கு தான் சண்டை நடந்து வருகிறது. இதில் பண்ட்-ஆ, சஞ்சு சாம்சனா என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஸ்ரேயாஸ் ஐயர் அபார ரெக்கார்ட்டால் உள்ளே வந்துவிடுவார் போல் தெரிகிறது. விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 25, 2022, 14:27 [IST]
Other articles published on Nov 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+