Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ:இரண்டு வாய்ப்பை வீணடித்தோம்..பவுலிங்கில் தையரிமாக இருக்கனும்..தோல்வி குறித்து சுப்மன் கில்

மும்பை: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து எட்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவிய நிலையில், தற்போது வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய அணி 285 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தும் அதனை நியூசிலாந்த அணி 15 பந்துகள் எஞ்சிய நிலையில் வென்றது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் கில், நாங்கள் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை எடுக்க தவறிவிட்டோம்.

எனினும் பந்துவீச்சில் நாங்கள் நன்றாக தான் ஆரம்பித்தோம். அது மட்டுமில்லாமல் ஆட்டத்தின் நடுவில், அவர்களின் கண்டிப்பாக விக்கெட் எடுத்திருக்க வேண்டும். பவர் பிளவில் உங்களால் அதிக விக்கெட் எடுக்க முடியவில்லை என்றால் நிச்சயம், அதன் பிறகு அனைத்தும் கடினமாக மாறிவிடும்.

நாங்கள் கூடுதலாக ஒரு 20 ரன்கள் அடித்திருக்க வேண்டும். பார்ட்னர்ஷிப் அமைக்கப்படும்போது நிலையாக ஒரு வீரர் கடைசி வரை நின்று விளையாட வேண்டும். அப்போதுதான் புதியதாக ஒரு பேட்ஸ்மேன் வரும்போது சுதந்திரமாக அதிரடி காட்டி சேர்க்க முடியும் .

முதல் 10, 15 ஓவர்களில் பந்து கொஞ்சம் நெருக்கடி கொடுத்தது. இன்னும் எங்களுடைய பந்துவீச்சில் நாங்கள் தைரியமாக செயல்பட்டு இருக்க வேண்டும். நாங்கள் பில்டிங்கில் கொஞ்சம் முன்னேற வேண்டும். கடந்த போட்டியில் கூட சில வாய்ப்புகளை தவற விட்டோம். இந்த போட்டியிலும் நாங்கள் சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல் சொதப்பி விட்டோம்.

உங்களுக்கான வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் நெருக்கடியில் சிக்குவது உறுதி என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மட்டும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுவரை இந்திய மண்ணில் நியூசிலாந்த அணி ஒருநாள் தொடரை வென்றதில்லை என்ற சூழலில் தற்போது அதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கம்பீர் பயிற்சியாளராக பதவி ஏற்றதிலிருந்து எந்தெந்த அணி எல்லாம் பல ஆண்டுகளாக இந்திய மண்ணில் வெற்றியை பெறவில்லையோ அவர்களுக்கெல்லாம் வெற்றியை தேடி தந்து வருகிறார் என்று விமர்சனமும் இருந்துள்ளது.

Story first published: Wednesday, January 14, 2026, 22:24 [IST]
Other articles published on Jan 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+