For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: எந்த வீரரும் செய்யாத டி20 ரெக்கார்டு.. பாபர் சாதனையை உடைத்த இந்திய கேப்டன் சூர்யகுமார்

நாக்பூர்: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போது புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலம், பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாமின் நீண்ட கால சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக்பூர் டி20 போட்டியில் பங்கேற்றதன் மூலம் சூர்யகுமார் யாதவ் தனது 100வது சர்வதேச டி20 போட்டியில் அடியெடுத்து வைத்தார். இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், மிகக் குறுகிய காலத்தில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

IND vs NZ Suryakumar Yadav Breaks Babar Azam s Record Fastest to 100 T20Is in Historic Milestone Against New Zealand

பாபர் அசாம் சாதனை முறியடிப்பு

பொதுவாக ஒரு வீரர் அறிமுகமாகி 100 போட்டிகளைத் தொடுவதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் சூர்யகுமார் யாதவ் மின்னல் வேகத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 2021ஆம் ஆண்டு அறிமுகமான சூர்யகுமார் யாதவ், தனது 100வது போட்டியை எட்ட வெறும் 1774 நாட்களை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம், தனது 100வது டி20 போட்டியை எட்ட 2410 நாட்கள் எடுத்துக்கொண்டதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் மிக எளிதாகக் கடந்து, முழு நேர உறுப்பு நாடுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

சூர்யகுமார் யாதவின் கிரிக்கெட் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. 2021ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தனது வரவை உலகுக்கு அறிவித்தார்.

அதன் பிறகு அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டும் அவரது தனித்துவமான '360 டிகிரி' பேட்டிங் முறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தாமதமாக இந்திய அணிக்குள் வந்தாலும், டி20 கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.

வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் இல்லாமல், 2024ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்காற்றினார். இறுதிப்போட்டியில் அவர் பிடித்த அந்த ஒரு கேட்ச் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக மாறியது. அதன் பின் தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் உயர்ந்துள்ளார்.

சூர்யகுமாரின் கிரிக்கெட் பயணம் ஒரு பார்வை:

டி20 அறிமுகம்: 2021 மார்ச் 14 (இங்கிலாந்துக்கு எதிராக)

ஒருநாள் போட்டி அறிமுகம்: 2021 ஜூலை 18 (இலங்கை அணியுடன்)

டெஸ்ட் அறிமுகம்: 2023 பிப்ரவரி 9 (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)

ஐபிஎல் அறிமுகம்: 2012 ஏப்ரல் 6 (மும்பை இந்தியன்ஸ்)

Story first published: Wednesday, January 21, 2026, 19:24 [IST]
Other articles published on Jan 21, 2026
English summary
IND vs NZ: Suryakumar Yadav Breaks Babar Azam's Record: Fastest to 100 T20Is in Historic Milestone Against New Zealand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+