Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ : நீங்கள் எதிர்பார்க்காத இந்த இந்திய வீரர்தான் மேட்ச் வின்னர்.. அடித்துக் கூறும் ஜோதிடர்

மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள நிலையில் மும்பையை சேர்ந்த பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ் என்பவர் அதிரடியாக சில கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

இந்திய அணியில் இதுவரை நடந்த போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத இந்திய வீரர் தான் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் முக்கியமானவராக இருக்கப் போகிறார் என கூறி இருக்கிறார்.

IND vs NZ : Suryakumar Yadav, Virat Kohli, Shubman Gill, Rohit Sharma will play good says Astrolger

சுமித் பஜாஜ் என்ற ஜோதிடர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து அரை இறுதிப் போட்டியில் இந்தியா தான் வெல்லும் என அடித்துக் கூறி இருக்கிறார். அத்துடன் இந்தப் போட்டியில் எந்த இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடப் போகிறார்கள், அரை இறுதி, இறுதிப் போட்டிகளில் சிறப்பாக ஆடப் போகும் வீரர் யார் என்ற விவரத்தையும் அவர் கூறி இருக்கிறார்.

"விராட் கோலி, சுப்மன் கில், ரோஹித் சர்மா ஆகிய மூவரும் அரை இறுதிப் போட்டியில் முக்கிய பங்கை வகிப்பார்கள். கேப்டனின் ஜாதகம் ஒரு அணிக்கு மிகவும் முக்கியம். அந்த வகையில், ரோஹித் சர்மா அணியில் முக்கிய பங்கை வகிப்பார். உலகக்கோப்பை வெல்வதும் உறுதி. அவருக்கு தற்போது 36.5 வயது ஆகிறது. இந்த காலகட்டம் அவருக்கு நன்றாக உள்ளது. விராட் கோலியும் இப்போது உச்சத்தில் இருக்கிறார்." என்றார் அந்த ஜோதிடர்.

இதுவரை லீக் சுற்றுப் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத சூர்யகுமார் யாதவ் எப்படி ஆடுவார்? என்பது பற்றி கூறுகையில், அந்த ஜோதிடர், "மற்றொரு வீரரான சூர்யகுமார் யாதவ் நாக் - அவுட் (அரை இறுதி மற்றும் இறுதி) போட்டிகளில் சிறப்பாக ஆடுவார். அவர் அரை இறுதியிலும் முக்கிய பங்கை வகிப்பார்." என்றார்.

இந்த ஜோதிடர் கூறியதில் சுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா ரன் குவிக்கப் போகிறார்கள் என்பதை யார் வேண்டுமானாலும் எளிதில் கூறி விடலாம். ஆனால், சூர்யகுமார் யாதவ் மேட்ச் வின்னர் என்கிற ரீதியில் அவர் கூறி இருப்பது நடக்குமா? என பார்க்கலாம்.

Story first published: Tuesday, November 14, 2023, 10:16 [IST]
Other articles published on Nov 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+