Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்தியாவுக்கு எதிராக இன்னும் 56 ரன்கள் எடுத்தால் உலக சாதனை.. குறிவைத்த கிளென் பிலிப்ஸ்

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அதிரடி பேட்டர் கிளென் பிலிப்ஸ் 56 ரன்கள் அடித்தால், சர்வதேச டி20 வரலாற்றில் மாபெரும் உலக சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைக்க வாய்ப்புள்ளது.

இருதரப்பு டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு பிலிப்ஸுக்கு கிடைத்துள்ளது. ஆக்லாந்தில் நடந்த 4-வது போட்டியில் 49 பந்துகளில் 107 ரன்கள் விளாசிய அவர், நடப்புத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் 276 ரன்கள் குவித்து அபார பார்மில் உள்ளார். தற்போது இங்கிலாந்தின் பில் சால்ட் 2023-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5 போட்டிகளில் அடித்த 331 ரன்களே உலக சாதனையாக உள்ளது. இன்னும் 56 ரன்கள் எடுத்தால் பில் சால்ட்டை முந்தி பிலிப்ஸ் உலக சாதனை படைப்பார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 316 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

IND vs NZ T20 Glenn Phillips 56 Runs Away from World Record for Most Runs in a Bilateral T20I Series Ahead of 5th T20I

இதுமட்டுமின்றி, நியூசிலாந்து அணிக்காக இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைக்க அவருக்கு வெறும் 15 ரன்கள் மட்டுமே தேவை. தற்போது மார்க் சாப்மேன் 290 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். சாப்மேன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை செய்து இருந்தார். பிலிப்ஸ் 15 ரன்கள் எடுத்தாலே இந்த சாதனையைத் தன்வசமாக்கி விடுவார்.

IND vs NZ: காஷ்மீர் பவுலர் ஆகிப் நபிக்கு ஜாக்பாட்.. 5 ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் சேர்ப்பு

IND vs NZ: காஷ்மீர் பவுலர் ஆகிப் நபிக்கு ஜாக்பாட்.. 5 ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் சேர்ப்பு

மேலும், இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் அரைசதம் விளாசினால், ஒரே டி20 தொடரில் 4 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்த உலகின் 3-வது வீரர் என்ற பெருமையையும் பெறுவார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் ஜப்பானின் சபோரிஷ் ரவிச்சந்திரன் ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இந்திய பந்துவீச்சை தொடர்ந்து சிதறடித்து வரும் பிலிப்ஸின் இந்த சாதனை வேட்டையை இந்திய பவுலர்கள் தடுத்து நிறுத்துவார்களா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Sunday, November 1, 2026, 7:49 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+