For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: பைனலில் வென்று விடுங்கள்,இல்லையேனில் நீங்க தான் சோக்கர்ஸ்- தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டெயின்

மும்பை: 2026 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் ஞாயிற்றுகிழமை மோதுகின்றன. முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், இப்போட்டியில் இந்தியா நிச்சயம் வெல்லும் என கணித்துள்ளார். இந்தியா 'பெரும் தடுமாற்றத்தை' சந்தித்தால்தான் தோல்வி அடையும் என்றும், இல்லையெனில் 'சோக்கர்ஸ்' பட்டத்தை தென் ஆப்பிரிக்காவிலிருந்து நியூசிலாந்திற்கு மாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்த முக்கியப் போட்டிக்கு முன்பு பேசிய ஸ்டெய்ன், நியூசிலாந்து அணியின் ஐசிசி இறுதிப் போட்டிகளின் மோசமான சாதனையை சுட்டிக்காட்டினார். இதுவரை விளையாடிய ஏழு ஐசிசி இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து ஐந்து முறை தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏபி டி வில்லியர்ஸின் யூடியூப் சேனலில் பேசிய ஸ்டெய்ன், "எல்லோரும் தென் ஆப்பிரிக்காவை 'சோக்கர்ஸ்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் நான் ஒன்றைப் பேசுகிறேன். நியூசிலாந்தும் பல உலகக்கோப்பைகளை வெல்லவில்லை. எங்களை விட அதிக இறுதிப் போட்டிகளில் அவர்கள் பங்கேற்றுள்ளனர்," என்றார்.

T20 WC: அபிஷேக் சர்மாவை அணியிலிருந்து நீக்க கூடாது..பைனலுக்கு முன் தவறு செய்யாதீங்க-ரவி சாஸ்த்ரிT20 WC: அபிஷேக் சர்மாவை அணியிலிருந்து நீக்க கூடாது..பைனலுக்கு முன் தவறு செய்யாதீங்க-ரவி சாஸ்த்ரி

"நியூசிலாந்து, தவறாக நினைக்க வேண்டாம், நீங்கள் இந்த கோப்பையை வெல்லுங்கள்; இல்லையெனில், நான் உங்களை தான் இனி சோக்கர்ஸ் என்று அழைப்பேன். அது உங்களுடையது. நான் நியூசிலாந்தை விரும்புகிறேன், ஆனால் அவர்களால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது. அதற்காக இந்தியா ஒரு பெரிய தடுமாற்றத்தைச் சந்தித்திருக்க வேண்டும். அது சாத்தியமற்றது. அவர்கள் வெற்றிபெற நான் விரும்புகிறேன், ஆனால் அவர்கள் இந்தியாவை தோற்கடிப்பார்கள் என்று நினைக்கிறேனா? இல்லை," என்று உறுதியாகக் கூறினார்.

சுவாரஸ்யமாக, நியூசிலாந்து வென்ற இரண்டு முக்கிய ஐசிசி இறுதிப் போட்டிகளும் இந்தியாவை எதிர்த்துதான். 2000ஆம் ஆண்டு நாக்கவுட் டிராபி (தற்போது சாம்பியன்ஸ் டிராபி) மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏபி டி வில்லியர்ஸ் "தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்தை நான் வெறுக்கிறேன். 2015-ல் அவர்கள் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஒருபோதும் தோற்கடித்திருக்க மாட்டார்கள். நான் சொல்வதற்காக பலர் வெறுக்கலாம், ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்கக்கூடிய ஒரே அணி தென் ஆப்பிரிக்காதான்," என்று குறிப்பிட்டார்.

IND vs NZ: பைனலில் 300 ரன்கள் கூட அடிக்கலாம்.. அகமதாபாத் ஆடுகளத்தை மாற்றிய ஐசிசி.. விவரம்IND vs NZ: பைனலில் 300 ரன்கள் கூட அடிக்கலாம்.. அகமதாபாத் ஆடுகளத்தை மாற்றிய ஐசிசி.. விவரம்

"இப்போது நியூசிலாந்து மீண்டும் இறுதிப் போட்டியில் இந்தியாவை, இந்தியாவில் எதிர்கொள்கிறது. ஒரு விளையாட்டு அணியாக நியூசிலாந்து மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனாலும், டேல், ஒருவேளை நியூசிலாந்து இந்த டி20 உலகக் கோப்பையை வென்றால், நாம் இருவரும் கொல்லப்படுவோம்," என்று கிண்டலாக கூறினார்.

Story first published: Saturday, March 7, 2026, 7:00 [IST]
Other articles published on Mar 7, 2026
English summary
The 2026 T20 World Cup final sees India to face New Zealand. Former bowler Dale Steyn weighs India’s chances and highlights past final records, while recognising New Zealand's experience, emphasising a measured, non-sensational outlook. The article covers expectations, context and key factors shaping the final.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+