மும்பை: 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா நான்கு ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் காரணமாக நியூசிலாந்த அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. அது மட்டுமில்லாமல் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்தையும் பிடித்திருக்கிறார்.இறுதிப்போட்டியில் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், இந்த விருது மற்றும் இந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. ஏனென்றால் இது என்னுடைய சொந்த மண். இதற்கு முன்பு நான் இங்கு ஒரு இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கின்றேன். அப்போது என்னால் வெற்றி பெற முடியவில்லை.
தற்போது நான் வெற்றியை பெற்று விட்டேன். இங்கு ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக தான் இருக்கும் என்று எனக்கு தெரியும். இதனால் என்னுடைய முழு அனுபவத்தையும் பயன்படுத்தி பந்து வீசினேன். இந்த தொடருக்கு முன்பே நான் எவ்வாறு பந்து வீசவேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். ஏனென்றால் நான் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்கின்றேன்.
அப்படி நான் செய்யும் போதெல்லாம் எனக்கு பெரிய அளவு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. எனவே இந்த தொடரில் நாம் நாமாகவே இருப்போம். நமது ஆட்டம் நமக்கு கை கொடுக்கும் என்று நம்பினேன். என்னுடைய தனிப்பட்ட சுய பரிசோதனை தான் என்னுடைய பலம். நான் எங்கு தவறு செய்கின்றேன் என்ன செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது குறித்து யோசித்து என்னுடைய பந்துவீச்சை மேம்படுத்துவேன்.
சொந்த மண்ணில் உலககோப்பை இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது கிடைப்பதெல்லாம், அதுவும் வெற்றியின் கிடைப்பது உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய விஷயம். இங்கு நடைபெற்ற போட்டிகளையும் நான் பார்த்திருக்கின்றேன். இங்கு பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். பவுலர்கள் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுப்பார்கள்.

எனவே அந்தப் போட்டியை பார்த்து சில பாடங்களை நான் கற்றுக் கொண்டு, அதை இந்த போட்டியில் செயல்படுத்தினேன். அறிவை பயன்படுத்தி வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள். அதற்கு ஏற்ப நாம் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வேன். இந்த தொடர் முழுவதும் நாங்கள் பதற்றமே அடையவில்லை. தண்ணீரில் மூழ்கும் நிலை வந்தாலும், எப்போதுமே தலையை மட்டும் தண்ணீருக்கு மேல் வைத்திருந்தோம். அதை செய்யும் அணி மட்டும்தான் உலக கோப்பையை வெல்லும் அதை நாங்கள் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பும்ரா தெரிவித்துள்ளார்.