Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: 76 வயதில் நடனமாடிய கவாஸ்கர்.. டி20 உலககோப்பை வென்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்

2026 ஐசிசி டி20 உலக கோப்பையை இந்தியா வென்றதை கொண்டாடும் வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மகிழ்ச்சியில் நடனமாடினார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சொந்த மண்ணில் கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது இந்தியா.

சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி பேட்டிங்கால் இந்தியா 255/5 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, நியூசிலாந்தின் வெற்றி கனவை கலைத்தார். சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா இறுதிப் போட்டியின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்தியா மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றதால், கொண்டாட்டங்கள் களைகட்டின. இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்திருக்க, வர்ணனையாளராக இருந்த சுனில் கவாஸ்கர் தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தொலைக்காட்சியில் நடனமாடினார்.76 வயதில் கவாஸ்கர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியா கடந்த ஆண்டு துபாயில் வென்ற போதும் கவாஸ்கர் நடனமாடி அசத்தினார். ஹர்திக் பாண்டியா மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அர்ஷ்தீப் சிங், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உருவாக்குவது குறித்து நகைச்சுவையாகப் பேசினார். பொதுவாக அமைதியானவர் என்று அறியப்படும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சிரித்த காட்சி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்திய அணி வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ஜஸ்பிரீத் பும்ராவைச் சூழ்ந்து கொண்டாடினார்கள். "வந்தே மாதரம்" என ரசிகர்கள் கோஷமிட, குடும்பத்தினரும் இக்கொண்டாட்டத்தில் இணைந்தனர். இதே போன்று ஹர்திக் பாண்டியாவின் காதலி, அவருக்கு மைதானத்தில் அனைவரும் முன்பு முத்தம் கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

Story first published: Monday, March 9, 2026, 13:50 [IST]
Other articles published on Mar 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+