அகமதாபாத்: 2026 டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னதான நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர், இந்திய ரசிகர்கள் இதயத்தை உடைப்போம் என்று கூறியதற்கு இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பதிலடி தந்துள்ளார். அகமதாபாத் ரசிகர்களை 'அமைதியாக்கி', இந்திய ரசிகர்களின் மனதை உடைப்பதே தமது இலக்கு என சான்ட்னர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இக்கருத்துகள், 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் அதே மைதானத்தில் ஆஸ்திரேலியக் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதைப் போலவே இருந்தன. அன்று, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்க, நரேந்திர மோடி ஸ்டேடியம் ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

சான்ட்னர் செய்தியாளர்களிடம், "கூட்டத்தை அமைதியாக்குவதே இலக்கு. டி20 கிரிக்கெட் நிலையற்றது, பல விஷயங்கள் உள்ளன," என்றார். இதற்கு பதிலடி தந்த சூர்யகுமார், எதிரணிகள் இறுதிப் போட்டிக்கு முன் ஒரே மாதிரி பேசாமல், புதிய அணுகுமுறைகளை ஆராய வேண்டும் என வலியுறுத்தினார்.

"அனைவரும் ஒரே விஷயத்தைச் சொல்கிறார்கள். அவர்கள் புதிய ஒன்றைப் முயற்சிக்க வேண்டும். இது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். எங்கள் குழுவில் நல்ல சூழல் உள்ளது. பெரிய இறுதிப் போட்டிக்காக நாங்கள் காத்திருக்கிறோம்," என சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
2021 அறிமுகத்திற்குப் பிறகு, இந்தியாவை டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தலைமை தாங்குவது பற்றி சூர்யகுமார் யாதவ் தனது பயணத்தை நினைவு கூர்ந்தார்."நாளை அணியை வழிநடத்துவது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. சொந்த மண்ணில் இவ்வளவு அற்புதமான அணியை இறுதிப் போட்டியில் வழிநடத்துவது சிறப்பான அனுபவம். நிச்சயமாக, பதட்டங்கள் இருக்கும்."
"இந்திய அணி உற்சாகமாக உள்ளது. நாங்கள் எல்லாவற்றையும் எளிமையாக வைத்திருக்க விரும்புகிறோம், சிக்கலாக்க விரும்பவில்லை. இவ்வளவு பெரிய நிகழ்வில் இந்தியாவை வழிநடத்துவது எனக்கு ஒரு நீண்ட பயணம். நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், என் குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளது." என்று கூறினார்.
"எங்கள் மந்திரம் மிகவும் தெளிவாக உள்ளது: முடிந்தவரை நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். ஆம், அது மிகவும் கடினம். நீங்கள் உற்சாகமடையலாம். எனவே, டிரஸ்ஸிங் ரூமில் நிகழ்காலத்தில் இருக்கச் சொல்வதும் முக்கியம். நீங்கள் முன்கூட்டியே செயல்பட்டால், சூப்பர் 8ல் எங்களுக்கு நடந்தது போல், தடுமாறி விழ வாய்ப்புள்ளது. வான்கடே போல, நாங்கள் அமைதியாக இருக்க விரும்புகிறோம். நல்ல பயிற்சி இருக்க வேண்டும். விஷயங்கள் எங்கள் கைகளில் உள்ளன," என்றார்.
"ஆனால் இஷான், அக்சர் மற்றும் இன்னும் பலர், சிவம், அர்ஷ்தீப் போன்றவர்கள் உள்ளனர். சூழ்நிலை இறுக்கமாக இருக்கும்போது, கிரிக்கெட்டைப் பற்றிப் பேசாமல், மனநிலையை லேசாக வைத்திருக்கும் நகைச்சுவையான நபர்கள் தேவை. வீரர்கள் என்ற முறையில், அழுத்தத்தின் கீழ் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். நான் அவர்களிடம் 'இன்று இரவு என்ன உணவு சாப்பிடுவீர்கள், நாளை என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறேன்," என அவர் குறிப்பிட்டார்.

கபில் தேவ்,தோனி, ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல இந்தியாவை வழிநடத்தும் நான்காவது கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார்.இறுதிப் போட்டியில் வென்றால், இந்திய அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணியாகவும், கோப்பையைப் பாதுகாக்கும் முதல் அணியாகவும், சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் முதல் அணியாகவும் திகழும்.