For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: சஞ்சு சாம்சன் டி20, ஒருநாள் போட்டி கேப்டனாக நியமிக்கனும்.. ரசிகர்கள் கோரிக்கை

அகமதாபாத்: டி20 உலக கோப்பை 2026 தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பேட்டங்கில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியது தான் காரணம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய நிலையில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கினார்.

அதன் பிறகு இந்திய அணி பட்டையைக் கிளப்ப தொடங்கிவிட்டது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு காலிறுதி போன்ற ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 89 ரன்களும், தற்போது இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 46 பந்துகளில் 89 ரன்களும் அவர் குவித்திருக்கிறார்.

இதன் மூலம் இந்த தொடரில் சஞ்சு சாம்சன் மொத்தமாக 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்று இருக்கிறார். மேலும் ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலி சாதனையையும் அவர் முறியடித்திருக்கிறார். இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இனி நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மகனே சாதிச்சிட்ட டா! சூர்யகுமாரை கட்டி அணைத்து முத்தமிட்ட தாய்.. டி20 உலககோப்பை வென்ற பிறகு நெகிழ்ச்சிமகனே சாதிச்சிட்ட டா! சூர்யகுமாரை கட்டி அணைத்து முத்தமிட்ட தாய்.. டி20 உலககோப்பை வென்ற பிறகு நெகிழ்ச்சி

இனி அணியை விட்டு நீக்கவே கூடாது என்றும் அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார் என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இனி தொடர்ந்து சில போட்டிகளில் தடுமாறினால் கூட அவருக்கு தொடர்ந்து உறுதுணையாக நின்று வாய்ப்பு வழங்க வேண்டும். என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாய்ப்பு வழங்கினால் சாம்சன் பல சாதனைகளை இதுபோல் படைத்து அணியை வெற்றி பெற வைப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் சஞ்சு சாம்சனை டி20 மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் என்பதால் அவர் பில்டிங்கை செட் செய்வது பௌலர்களுக்கு அறிவுரை வழங்குவது போன்ற பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

IND vs NZ: ஜெய்ஷா, ரோகித் வைத்த நம்பிக்கை.. கம்பீர் பெயரை தவிர்த்த கேப்டன் சூர்யகுமார்IND vs NZ: ஜெய்ஷா, ரோகித் வைத்த நம்பிக்கை.. கம்பீர் பெயரை தவிர்த்த கேப்டன் சூர்யகுமார்

ஏற்கனவே ஐபிஎல் போன்ற தொடர்களில் சாம்சன் கேப்டனாக செயல்பட்டு இருக்கும் அனுபவம் உள்ளதால் விரைவில் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஒரு நாள் அணியிலும் இனி சாம்சன் இடம் பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Monday, March 9, 2026, 8:00 [IST]
Other articles published on Mar 9, 2026
English summary
Sanju Samson delivered defining performances across the 2026 T20 World Cup, including pivotal centuries and rapid knocks that propelled India to the title. His consistent runs and leadership on field have sparked calls for a permanent position in the team and consideration for captaincy, with commentators noting the strategic value of his wicketkeeping and bowling guidance.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+